பந்துவீச்சில் தாமதம் கோஹ்லிக்கு அபராதம்

தினகரன்  தினகரன்
பந்துவீச்சில் தாமதம் கோஹ்லிக்கு அபராதம்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் மொகாலியில் நேற்று முன்தினம் நடந்த போட்டியில், கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்து புள்ளிப் பட்டியலில் தனது  கணக்கை தொடங்கியது. முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 173 ரன் எடுத்தது. தொடக்க வீரர் கிறிஸ் கேல் ஆட்டமிழக்காமல் 99 ரன் விளாசினார். அடுத்து களமிறங்கிய ஆர்சிபி 19.2 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 174 ரன் எடுத்து அபாரமாக வென்றது. பார்திவ் 18, கோஹ்லி 67 ரன் விளாசி பெவிலியன் திரும்பினர். டி வில்லியர்ஸ் 59 ரன் (38 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்),  ஸ்டாய்னிஸ் 28 ரன்னுடன் (16 பந்து, 4 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தனர். டி வில்லியர்ஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்த போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி குறிப்பிட்ட நேரத்துக்குள்ளாக நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களை வீசி முடிக்கத் தவறியதால், அந்த அணியின் கேப்டன் கோஹ்லிக்கு ₹12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை