உலகின் பல்வேறு பகுதிகளில் பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் சேவைகள் முடக்கம்: பயனாளர்கள் கடும் அவதி

தினகரன்  தினகரன்
உலகின் பல்வேறு பகுதிகளில் பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் சேவைகள் முடக்கம்: பயனாளர்கள் கடும் அவதி

வாஷிங்டன்: உலகெங்கிலும் உள்ள மக்கள் நேற்று (ஞாயிற்றுகிழமை) காலை இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை உபயோகிக்க முடியவில்லை எனப் புகார் தெரிவித்துள்ளனர். விடுமுறை தினமான நேற்று பேஸ்புக் சேவை 2 மணி நேரத்திற்கு மேலாக சேவை முடங்கியதால் பயனாளர்கள் பெரும் அவதிக்குள்ளாக்கப்பட்டனர். இந்த சம்பவம், நேற்று காலை EDT நேரப்படி 6.28 மணி அளவில் அதாவது இந்திய நேரப்படி மாலை 4 மணி அளவில் வலைத்தளங்களின் சேவை முடங்கியுள்ளது. குறிப்பாக இந்தியாவில் பேஸ்புக்கின் டெஸ்க்டாப் செயலிகள் மட்டுமே செயல்படவில்லை என்றும், மொபைல் போன்களில் பயன்படுத்தப்படும் பேஸ்புக் செயலி நன்றாக செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது. வட அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும் மற்றும் ஆபிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் ஒரே நேரத்தில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் சேவைகள் முடங்கியதாக கூறப்படுகிறது. முக்கியமாக, அமெரிக்கா, மலேசியா, துருக்கி உள்ளிட்ட நாடுகளில் தான் இந்த சேவைகள் கிடைக்காமல் பயனாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் வலைத்தள பயனாளர்களால் தங்கள் கணக்குகளை பயன்படுத்த முடியதாக காரணத்தால், பயனாளர்கள் பெரும் அதிருப்தி அடைத்துள்ளனர். பிற சமூக வலைத்தளங்கள் மூலமாக பேஸ்புக் இயங்காததது குறித்து பல்வேறு கேள்விகளையும், விமர்சனங்களையும் எழுப்பியுள்ளனர். இருப்பினும் சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகு இந்த முடக்கம் படிப்படியாக சீரடைந்தது. இதேபோன்று கடந்த மார்ச் மாதத்தில் ஒருமுறை ஏற்பட்ட செயலிழப்பு சீரடைய 24 மணி நேரம் வரை பேஸ்புக் நிறுவனம் எடுத்தது குறிப்பிடத்தக்கது. அந்த சமயம் பேஸ்புக் நிறுவனம் சர்வர் கோளாறு ஏற்பட்டதாக அறிவித்திருந்தது. தற்போது பல நாடுகளில் இந்த சேவை முடங்கியது தொடர்பாக பேஸ்புக் நிறுவனம் ஆலோசனை நடத்தி வருகிறது. பேஸ்புக் செயலியை தினசரி பயன்படுத்துவோர்  1.5 கோடி பயனாளர்கள் என்றும், மாதம் ஒருமுறை பயன்படுத்துவோர் 2.3 கோடி பயனாளர்கள் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

மூலக்கதை