ஆஸி., பிரதமர் தமிழ்புத்தாண்டு வாழ்த்து

தினமலர்  தினமலர்
ஆஸி., பிரதமர் தமிழ்புத்தாண்டு வாழ்த்து

சிட்னி : ஆஸி., பிரதமர் ஸ்காட் மோரிசன் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, தமிழ் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ஆஸ்திரேலியாவில் வாழும் தமிழ் சமூக மக்களுக்கும், உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களுக்கும் எனது தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த புத்தாண்டு உங்களின் கடந்த கால பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது.
ஆஸ்திரேலிய நாட்டினராக, எங்களின் நிலத்தில் வாழ்கிறோம். எங்களின் கலாச்சாரம் பல்வேறு மாறுபாடு அடைந்துள்ளது. எங்களின் கலாச்சாரத்தை பிற கலாச்சாரங்களில் இருந்தே நான் கற்றுக் கொள்கிறேன். உங்களுடன் அமைதி மற்றும் சகிப்புதன்மையை ஆதாரமாகக் கொண்டு வளமாக எங்களின் நாட்டை கட்டமைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
ஆஸ்திரேலிய தமிழ் சமூகத்தால் மாறுபட்ட கலாச்சாரம், பன்முக தன்மை கொண்ட சமூகத்துடன் நாங்கள் வாழ்வது முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த புத்தாண்டு அனைவருக்கும் அமைதி மற்றும் மகிழ்ச்சி தர வேண்டும் என வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூலக்கதை