உத்தரபிரதேசம் வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து பிரியங்கா போட்டி? வேட்பாளர் அறிவிக்காததால் எதிர்பார்ப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
உத்தரபிரதேசம் வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து பிரியங்கா போட்டி? வேட்பாளர் அறிவிக்காததால் எதிர்பார்ப்பு

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி சமீபத்தில், ‘கட்சி விருப்பப்பட்டால் தான் மக்களவை தேர்தலில் போட்டியிட தயாராக இருக்கிறேன்’ என்று அறிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது மக்களவை தேர்தலில் வாரணாசி தொகுதியில் அவர் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி மக்களவை உறுப்பினராக உள்ளார். கடந்த 2014ம் ஆண்டு தேர்தலில் அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்து 3,71,784  வாக்கு வித்தியாசத்தில் மோடி வெற்றி பெற்றார்.



இந்நிலையில் தற்போது 2019ம் தேர்தலில் பிரதமர் மோடியை எதிர்த்து, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை எதிர்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. காரணம், இன்னும் வாரணாசி தொகுதிக்கு காங்கிரஸ் தரப்பில் இன்னும் வேட்பாளர் அறிவிக்காததால் பிரியங்கா மீது பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

இவர், தற்போது கிழக்கு உத்தரபிரதேச காங்கிரஸ் பொறுப்பாளராகவும் உள்ளதால், அம்மாநிலத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


.

மூலக்கதை