கோஹ்லி, டிவிலியர்ஸ் அசத்தல் அரைசதம்: பெங்களூரு அணி முதல் வெற்றி | ஏப்ரல் 13, 2019

தினமலர்  தினமலர்
கோஹ்லி, டிவிலியர்ஸ் அசத்தல் அரைசதம்: பெங்களூரு அணி முதல் வெற்றி | ஏப்ரல் 13, 2019

மொகாலி: பிரிமியர் தொடரில் பெங்களூரு அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் போட்டியில் கேப்டன் கோஹ்லி, டிவிலியர்ஸ் அரைசதம் கடந்து கைகொடுக்க 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இந்தியாவில், 12வது பிரிமியர் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. மொகாலியில் நடந்த லீக் போட்டியில் பஞ்சாப், பெங்களூரு அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராத் கோஹ்லி, ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

பஞ்சாப் அணிக்கு லோகேஷ் ராகுல், கிறிஸ் கெய்ல் ஜோடி துவக்கம் தந்தது. முதல் ஓவரை கட்டுக்கோப்பாக வீசிய உமேஷ் யாதவ், 2 ரன் மட்டுமே வழங்கினார். நவ்தீப் சைனி பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய கெய்ல், உமேஷ் வீசிய 3வது ஓவரில் தொடர்ச்சியாக ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார்.

உமேஷ் வீசிய 5வது ஓவரில் அடுத்தடுத்து 2 பவுண்டரி அடித்த லோகேஷ் ராகுல், யுவேந்திர சகால் பந்தில் ஒரு சிக்சர் விளாசினார். தொடர்ந்து அசத்திய கெய்ல், முகமது சிராஜ் வீசிய 6வது ஓவரில் 2 சிக்சர், 3 பவுண்டரி உட்பட 24 ரன் எடுத்தார். முதல் விக்கெட்டுக்கு 66 ரன் சேர்த்த போது சகால் ‘சுழலில்’ ராகுல் (18) சிக்கினார். பொறுப்பாக ஆடிய கெய்ல், பிரிமியர் தொடரில் தனது 27வது அரைசதத்தை பதிவு செய்தார்.

மொயீன் அலி பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய மயாங்க் அகர்வால், சகால் பந்தில் ஒரு சிக்சர் பறக்கவிட்டார். இவர், 15 ரன்னில் சகாலிடம் சரணடைந்தார். முகமது சிராஜ் பந்தில் ஒரு சிக்சர் அடித்த சர்பராஸ் கான் (15) நிலைக்கவில்லை. மொயீன் அலி ‘சுழலில்’ சாம் கர்ரான் (1) அவுட்டானார். உமேஷ் வீசிய 19வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசிய கெய்ல், சிராஜ் வீசிய கடைசி ஓவரில் 2 பவுண்டரி அடித்தார்.

பஞ்சாப் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 173 ரன்கள் எடுத்தது. கெய்ல் (99), மன்தீப் சிங் (18) அவுட்டாகாமல் இருந்தனர். பெங்களூரு அணி சார்பில் யுவேந்திர சகால் 2 விக்கெட் வீழ்த்தினார்.

மறுமுனையில் அசத்திய டிவிலியர்ஸ், தன்பங்கிற்கு அரைசதமடித்தார். ஆன்ட்ரூ டை வீசிய 18வது ஓவரில் தொடர்ச்சியாக 2 பவுண்டரி அடித்த ஸ்டாய்னிஸ், சர்பராஸ் கான் வீசிய கடைசி ஓவரில் ஒரு பவுண்டரி உட்பட 6 ரன் எடுத்து வெற்றியை உறுதி செய்தார்.

பெங்களூரு அணி 19.2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்து இந்த சீசனில் முதல் வெற்றி பெற்றது. டிவிலியர்ஸ் (59), ஸ்டாய்னிஸ் (28) அவுட்டாகாமல் இருந்தனர்.

மவுன அஞ்சலி

கடந்த 1919, ஏப். 13ல் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் ‘ஜாலியன் வாலாபாக் படுகொலை’ நடந்தது. நேற்று, இதன் 100வது நினைவு தினத்தை முன்னிட்டு பஞ்சாப், பெங்களூரு அணி வீரர்கள் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

100

பொறுப்பாக ஆடிய பஞ்சாப் அணியின் கிறிஸ் கெய்ல், 79வது ‘டுவென்டி–20’ அரைசதமடித்தார். தவிர இவர், 21 சதமடித்துள்ளார். இதன்மூலம் ஒட்டுமொத்த ‘டுவென்டி–20’ அரங்கில், 100 முறை, 50 அல்லது அதற்கு மேல் ரன் எடுத்த முதல் வீரரானார்.

மூலக்கதை