ஆசிய கிளப் வாலிபால் சென்னை அணி தைபே பயணம்

தினகரன்  தினகரன்
ஆசிய கிளப் வாலிபால் சென்னை அணி தைபே பயணம்

சென்னை: ஆசிய அளவிலான கிளப் வாலிபால் போட்டியில்  இந்தியா சார்பில் பங்கேற்கும் புரோ வாலிபால் சாம்பியன் சென்னை அணி நாளை சீன தைபே செல்கிறது. இது குறித்து  வாலிபால் பெடரேஷன் ஆப் இந்தியா நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஆசிய அளவிலான கிளப் வாலிபால் போட்டி சீன தைபேவில் (ஏப். 18 - 24) நடைபெற உள்ளது. இதில்  புரோ வாலிபால் போட்டியில்  சாம்பியன் பட்டம் வென்ற  சென்னை ஸ்பார்டன்ஸ் அணி, இந்தியா சார்பில் பங்கேற்க  உள்ளது. இந்த அணியில்  மோகன் உக்கிரபாண்டியன், பிரபாகரன்,  அசோக் கார்த்திக், ஷெல்டன் மோசஸ், நரேஷ், ஹரிகரன், நவீன்ராஜா ஜேக்கப், அஜித்,  அகின்,  ஜெரோம் வினீத், அஸ்வால் ராய், ரத்தீஷ்,  ரூடி வெர்ஹாப் (கனடா),  ருஸ்லன்ஸ் சோரோகின்ஸ் (லாத்வியா) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

மூலக்கதை