விளையாட்டு வீரர்களுக்கு எப்சிஐ உதவித்தொகை

தினகரன்  தினகரன்
விளையாட்டு வீரர்களுக்கு எப்சிஐ உதவித்தொகை

சென்னை: விளையாட்டு வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் இந்திய உணவுக் கழகம் (எப்சிஐ) வழங்கும் உதவித்தொகையை பெற மே.3ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது குறித்து இந்திய உணவுக் கழகத்தின்  பொது மேலாளர்(விளையாட்டு) ஷைனி வில்சன் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விளையாட்டு  வீரர்களின், குறிப்பாக பின்தங்கிய, கிராமபுறங்களில் வசிக்கும் வீரர், வீராங்கனைகளின்  மேம்பாட்டுக்காக  எப்சிஐ நிறுவனம் உதவித் தொகையை வழங்கி வருகிறது. இந்த ஆண்டும்  தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களை சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு உதவித் தொகை வழங்க உள்ளது. இந்த மாநிலங்களைச் சேர்ந்த தகுதியுடைய 15-18,  18-24 வயது பிரிவினர் விண்ணப்பிக்கலாம். கால்பந்து, ஹாக்கி, கிரிக்கெட்  விளையாட்டுகளுக்கு ஆண்களும், டேபிள் டென்னிஸ், இறகுப்பந்து, பளுதூக்குதல்,  தடகளம் ஆகிய விளையாட்டுகளுக்கு ஆண்களும், பெண்களும்  விண்ணப்பிக்கலாம். மே 3ம் தேதி கடைசிநாள். மேலும் தகவலுக்கு: www.fci.gov.in.

மூலக்கதை