பாக்.கில் வெள்ளம் 8 பேர் பரிதாப பலி

தினகரன்  தினகரன்
பாக்.கில் வெள்ளம் 8 பேர் பரிதாப பலி

பெஷாவர்: பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி, வாகனம் மூழ்கியதில் 2 குழந்தைகள் உள்பட 8 பேர் பலியாகினர். தெற்கு வஜிரிஸ்தான் மாவட்டத்தில் உள்ள வானாவில் இருந்து ஜர்மிலான் நோக்கி, திருமணத்துக்கு சென்று கொண்டிருந்தவர்களின் வாகனம் தோய் குல்லா பகுதியை கடந்தபோது வெள்ளத்தில் சிக்கி நீரில் மூழ்கியது. இதுவரை 2 குழந்தைகள், 6 பெண்கள் உள்பட 8 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் காணாமல் போன 6 குழந்தைகளை தேடும் பணியில் மீட்புப் படையினர், ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை