அமெரிக்காவில் ஆசை காட்டி மைனர் பெண்ணை சீரழித்த இந்தியருக்கு ஆயுள் தண்டனை

தினகரன்  தினகரன்
அமெரிக்காவில் ஆசை காட்டி மைனர் பெண்ணை சீரழித்த இந்தியருக்கு ஆயுள் தண்டனை

நியூயார்க்: அமெரிக்காவில் மைனர் பெண்ணை ஏமாற்றி ஆபாச படம் எடுத்த இந்தியருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியில் வசிக்கும் இந்தியர் தீபக் தேஸ்பாண்டே (41). இவர் தன்னை மாடலிங் ஏஜென்ட் என கூறி ஆன்லைனில் கடந்த 2017ம் ஆண்டு விளம்பரம் வெளியிட்டார். ஆன்லைன் சாட்டிங் மூலம் இவரை, புளோரிடா மாநிலம், அர்லாண்டோ பகுதியைச் சேர்ந்த மைனர் பெண் ஒருவர் தொடர்பு கொண்டார்.அந்தப் பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி நிர்வாண படங்களை அனுப்பும்படி கூறியுள்ளார். அந்தப் பெண்ணும் தனது நிர்வாண படங்களை அனுப்பியுள்ளார். சில மாதங்கள் கழித்து அதே பெண்ணை, வேறு ஒரு நபர் போல் தொடர்பு கொண்ட தேஸ்பாண்டே, ஆபாச படங்கள் எடுக்க உதவ வேண்டும், இல்லையென்றால் நிர்வாண படங்களை இன்டர்நெட்டில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். கடந்த 2017ல், மைனர் பெண்ணை நேரில் சந்திக்க, அர்லாண்டோவுக்கு  தீபக் பயணம் செய்தார்.  அந்த பெண்ணை ஒரு ஓட்டலுக்கு அழைத்துச் சென்று பாலியல் உறவுக்கு பலமுறை உட்படுத்தி அதை வீடியோ எடுத்தார். இதேபோல், தீபக் 4 முறை அர்லாண்டோ சென்று ஆபாச படம் எடுத்துள்ளார். இது குறித்த ரகசிய தகவல் அமெரிக்க புலனாய்வுத் துறைக்கு (எப்.பி.ஐ) கிடைத்து அவரை கைது செய்தது. இந்த வழக்கு விசாரணையில் தன் மீதான குற்றத்தை தீபக் ஒப்புக் கொண்டார். வழக்கில் கடந்த செவ்வாய்க்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. அப்போது தீபக் பாண்டேவுக்கு ஆயுள் தண்டனை, ஆபாச படம் எடுத்த குற்றத்துக்காக 30 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

மூலக்கதை