ஐபிஎல் 2019; கெய்ல் அதிரடி; பெங்களூருக்கு 174 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப்

தினகரன்  தினகரன்
ஐபிஎல் 2019; கெய்ல் அதிரடி; பெங்களூருக்கு 174 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப்

பெங்களூரு: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சா அணிகள் பலப்பரிட்சை நடத்தி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணியில் கிறிஸ் கெய்ல் 64 பந்துகளில் 99 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு பெங்களூரு அணி விளையாடி வருகிறது.

மூலக்கதை