யாழிலிருந்து பயணித்த கார் விபத்து – ஒருவர் உயிரிழப்பு

TAMIL CNN  TAMIL CNN
யாழிலிருந்து பயணித்த கார் விபத்து – ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கார் விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 4 பேர் காயமடைந்துள்ளனர். சிலாபம் – புத்தளம் பிரதான வீதி ஆரச்சிகட்டுவ பகுதியில்  இன்று (சனிக்கிழமை) அதிகாலை இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கார் மற்றும் பாரவூர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டமையினால் குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் வெள்ளவத்தையைச் சேர்ந்த 48 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து ஆரச்சிகட்டுவ... The post யாழிலிருந்து பயணித்த கார் விபத்து – ஒருவர் உயிரிழப்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை