ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுது, உடைப்பு, வன்முறை... ஆந்திராவில் 380 வாக்குச்சாவடியில் நள்ளிரவு வரை நடந்த மறுவாக்குப்பதிவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுது, உடைப்பு, வன்முறை... ஆந்திராவில் 380 வாக்குச்சாவடியில் நள்ளிரவு வரை நடந்த மறுவாக்குப்பதிவு

நாடு முழுவதும் உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.   இதன்படி முதற்கட்ட தேர்தல் நேற்று நடந்தது. வருகிற மே 23ம் தேதி, அனைத்து கட்ட தேர்தல்களும் முடிந்தபின் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

அதுவரை, அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்கும் உரிய வாக்கு எண்ணிக்கை மையங்களில் 5 அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் வாக்கு பதிவு மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.   சில தொகுதிகளில் மின்னணு இயந்திரங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

இதுகுறித்து, தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்தியில், ‘ஆந்திராவில் 6, அருணாசல பிரதேசத்தில் 5, பீகாரில் ஒன்று, மணிப்பூரில் 2 மற்றும் மேற்கு வங்காளத்தில் ஒன்று என மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன’ என்று தெரிவித்து உள்ளது. ஆந்திராவில் 25 மக்களவை தொகுதிகளுடன்,  175 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நேற்று தேர்தல் நடைபெற்றது.

காலை  7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், ஒரு சில வாக்குச்சாவடிகளில்  வாக்குப்பதிவு இந்திரம் வேலை செய்யாததால், வாக்குப்பதிவு தொடங்க காலதாமதம்  ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுக்கு இடையே தகராறு, அடிதடி, மோதல்  ஏற்பட்டதால் வாக்களிக்க தாமதமானது.

இதனால் தேர்தல் ஆணையம்  குறிப்பிட்டிருந்த நேரத்தையும் கடந்து சுமார் 400 வாக்குச்சாவடிகளில்  நள்ளிரவு வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.

அரசியல் கட்சி தலைவர்களும்,  பிரபலங்களும், பொதுமக்களும் ஆர்வமுடன் வாக்களித்தனர்.

தெலுங்கு தேசம்  கட்சித் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு அமராவதி தொகுதியில்  உள்ள வாக்குச்சாவடியில் தனது ‌குடும்பத்தினருடன் வாக்களித்தார். அதேபோல்  ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, கடப்பாவில்  உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

முன்னதாக 400க்கும்  மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதானதால்,  மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததால், நேற்று  நள்ளிரவு வரை 380 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடந்ததாக தேர்தல்  அதிகாரிகள் தெரிவித்தனர்.
மொத்தமாக 18 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 91 மக்களவை மற்றும் ஆந்திரா, சிக்கிம், அருணாசல்பிரதேச மாநில சட்டபை, ஒடிசாவில் சில சட்டசபை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது.

அதில், பதிவான வாக்குகள் சதவீதத்தில் கணக்கிட்டால், கடந்த 2014ல் நடந்த தேர்தலின் போது 70. 9 சதவீத வாக்குகளும் நேற்று நடந்த வாக்குப்பதிவில் 63. 20 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளது தெரியவந்துள்ளது. இதில், மேற்குவங்கத்தில் நடந்த 2 மக்களவை ெதாகுதியில் அதிகப்பட்சமாக 82. 9 சதவீத வாக்குகளும் மிக குறைந்த பட்சமாக பீகாரில் 53. 06 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன.400க்கும்  மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதானதால்,  மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

ஒடிசாவில் 2 பூத் வெறிச்

ஒடிசாவில் 4 மக்களவைத் தொகுதிக்கான தேர்தலுடன், 28 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு வாக்குச்சாவடிகள், நக்சலைட் தீவிரவாதிகள் ஆதிக்கம் இருக்கும் பகுதியில் அமைந்திருந்தன.

மால்காங்கிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த வாக்காளர்கள், நக்சலைட்டுகள் மிரட்டலுக்கு பயந்து தேர்தலில் பங்கேற்கவில்லை. குறிப்பாக 2 வாக்குச்சாவடியில் ஒரு வாக்காளர்கள் கூட தங்களது வாக்கை வாக்குச் சாவடிக்கு சென்று பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.விஐபி வேட்பாளர்கள் யார்?

மக்களவை முதற்கட்டத் தேர்தலில் போட்டியிட்டவர்களில், மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி (நாகபுரி தொகுதி), கிரண் ரிஜிஜு (மேற்கு அருணாசல்), வி. கே. சிங் (காஜியாபாத்), மகேஷ் சர்மா (கவுதம் புத்தநகர்), ஹன்ஸ்ராஜ் அஹிர் (சந்திராபூர்), சத்யபால் சிங் (பாக்பத்), காங்கிரஸ் மூத்த தலைவர் ரேணுகா சவுத்ரி (கம்மம்), மஜ்லீஸ் இ கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைஸி (ஐதராபாத்), தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா (நிஜாமாபாத்), காங்கிரஸ் தெலங்கானா மாநிலத் தலைவர் உத்தம் குமார் ரெட்டி (நல்கொண்டா) ஆகியோர் முக்கியமானவர்கள். சட்டசபை தேர்தலை ெபாறுத்தமட்டில், ஆந்திரா மாநிலம் முழுவதும் நடந்ததால் எம்எல்ஏ பதவிக்கு போட்டியிட்ட அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, எதிர்க்கட்சிகள் வரிசையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஜெகன்மோகன்ரெட்டி, நடிகர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் விஐபி வேட்பாளர்கள் ஆவர்.


.

மூலக்கதை