கேரளாவில் மோடி நாளை பிரசாரம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கேரளாவில் மோடி நாளை பிரசாரம்

திருவனந்தபுரம்: கேரளாவில் வரும் 23ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதைெயாட்டி தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.

இந்தநிலையில் பிரதமர் மோடி நாளை (12ம் தேதி) பிரசாரத்துக்காக கோழிக்கோடு வருகிறார். மாலை 6. 10 மணியளவில் விமானப்படையின் தனி விமானம் மூலம் கோழிக்கோடு விமான நிலையத்துக்கு வருகிறார்.

அவருக்கு பாஜ தலைவர்கள் வரவேற்பு அளிக்கின்றனர். அதன்பின்னர் கார் மூலம் கடற்படை மைதானத்துக்கு செல்கிறார்.

தொடர்ந்து அங்கு நடக்கும் பொதுக் கூட்டத்தில் ேபசுகிறார்.

அந்த கூட்டத்தில் கோழிக்கோடு, வடகரை, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய தொகுதிகளை சேர்ந்த பாஜ கூட்டணி வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரிக்கிறார்.

பின்னர் 7. 35 மணியளவில் விமானம் மூலம் மதுரைக்கு வருகிறார். 18ம் தேதி மீண்டும் மோடி கேரளா வருகிறார்.

அன்று அவர் திருவனந்தபுரத்தில் நடக்கும் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.


.

மூலக்கதை