அமெரிக்க நாடாளுமன்றத்தால் அனுமதிக்கப்பட்ட எச்-1பி விசா வரம்பு ஐந்தே நாளில் எட்டியது!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
அமெரிக்க நாடாளுமன்றத்தால் அனுமதிக்கப்பட்ட எச்1பி விசா வரம்பு ஐந்தே நாளில் எட்டியது!

அமெரிக்க நாடாளுமன்றத்தால் அனுமதிக்கப்பட்ட 65 ஆயிரம் எச்-1பி விசா வரம்பு, ஏப்ரல் முதல் 5 நாளில் எட்டியதாக அமெரிக்க குடியுரிமைத்துறை தெரிவித்து உள்ளது. 

அமெரிக்க நிறுவனங்களில் வெளிநாட்டினர் சிக்கலின்றி தொடர்ந்து  பணியாற்ற எச்-1பி விசா வழங்கப்படுகிறது.

அமெரிக்காவில் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள் எல்லாம், இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களை பணியில் அமர்த்த இந்த விசாவை சார்ந்தே உள்ளன. 

எச்1பி விசாவால் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புகள் பறிபோனது. இதனால் அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் புதிய உத்தரவைப் பிறப்பித்தார். 

அமெரிக்க நிறுவனங்கள் அமெரிக்கர்களையே அதிக அளவில் பணியமர்த்த வேண்டும் என உத்தரவிட்டார். இதற்காக எச்1பி விசா விதிமுறைகளை கடுமையாக்கவும் உள்துறைக்கு உத்தரவிட்டார்.

அதிக திறமை வாய்ந்த, அதிக சம்பளம் வழங்கப்படும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு மட்டுமே எச்1பி விசாக்களை வழங்கும் வகையில் விதிமுறைகள் மாற்றப்பட்டன. 

ஒவ்வொரு நிதியாண்டும் 65 ஆயிரம் எச்1பி விசாக்களை வழங்க வேண்டும் என வரம்பு நிர்ணயிக்கப்பட்டது.

மெரிக்காவில் நிதியாண்டு அக்டோபர் 1ம் தேதி தொடங்குகிறது. இந்த ஆண்டுக்கான எச்1பி விசா விண்ணப்பங்களை அமெரிக்க குடியுரிமைத் துறை ஏப்ரல் 1ம் தேதி முதல் அமெரிக்க நிறுவனங்களிடம் இருந்து பெறத் தொடங்கின. முதல் 5 நாளிலேயே, 65 ஆயிரம் விசா வரம்பை அடைந்து விட்டதாக அமெரிக்க குடியுரிமைத் துறை தெரிவித்து உள்ளது. 

மூலக்கதை