சென்னை உயர்நீதிமன்ற 6 கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி உத்தரவு!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
சென்னை உயர்நீதிமன்ற 6 கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி உத்தரவு!

சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக பணியாற்றி வரும் 6 நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக  நியமித்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்து உள்ளார். 

சென்னை உயர்நீதி மன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக வி.பவானி சுப்பராயன், ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா,  ஜி.ஆர்.சுவாமிநாதன், அப்துல்குத்தூஸ், எம்.தண்டபாணி, பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் கடந்த  2017ம் ஆண்டு ஜூன் 28ம் தேதி பதவி ஏற்றனர். 

இவர்கள் 6 பேரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் குழு பரிந்துறை செய்தது. இந்தப்  பரிந்துரையை ஏற்று, இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்தார். 

இதையடுத்து, இந்த 6 கூடுதல் நீதிபதிகளும், நிரந்தர நீதிபதிகளாக 9ம் தேதி  (செவ்வாய்கிழமை) பதவி ஏற்கின்றனர். இவர்களுக்கு தலைமை நீதிபதி வி.கே.தஹில்ரமானி பதவி ப் பிரமாணம் செய்து வைக்கிறார். 

மூலக்கதை