ஐபிஎல் டி20 தொடரில் இன்று.... சென்னை-கொல்கத்தா அணிகள் மோதல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஐபிஎல் டி20 தொடரில் இன்று.... சென்னைகொல்கத்தா அணிகள் மோதல்

சென்னை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. டோனி தலைமையிலான சென்னை அணி நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 5 போட்டிகளில் ஆடி, 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும் 5 போட்டிகளில் ஆடி 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

இரு அணிகளுமே வலுவான நிலையில் உள்ளன. அதனால் இன்றைய போட்டி, ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. குறிப்பாக அதிரடி பேட்டிங்கின் மூலம் அணிக்கு வெற்றி தேடித் தரும் கொல்கத்தா வீரர் ஆண்ட்ரே ரஸலை, கட்டுப்படுத்த சென்னை பவுலர்கள் வியூகம் வகுத்துள்ளனர் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.

இதுவரை கொல்கத்தா ஆடிய 5 போட்டிகளில் 4 போட்டிகளில் பேட்டிங் செய்துள்ள ஆண்ட்ரே ரஸல் அவற்றில் 207 ரன்களை குவித்துள்ளார்.

ரஸலை கட்டுப்படுத்த சுழற்பந்து வீச்சாளர்களை சென்னை அணி நம்பியுள்ளது. குறிப்பாக அனுபவம் வாய்ந்த ஹர்பஜன் சிங், ரஸலுக்கு எதிராக களமிறக்கப்படுவார் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன. புள்ளி பட்டியலில் 8 புள்ளிகளுடன் இரு அணிகளும் உள்ளன.

எனினும் ரன் ரேட் அடிப்படையில் பட்டியலில் சென்னை அணி முதலிடத்தை பிடித்துள்ளது.

இன்றைய போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றால், பட்டியலில் அந்த அணி முதலிடத்திற்கு முன்னேறி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை