இரு அணிகளுக்கு வெற்றி வாய்ப்பு இருந்தது|: அஸ்வின் பேட்டி

தமிழ் முரசு  தமிழ் முரசு
இரு அணிகளுக்கு வெற்றி வாய்ப்பு இருந்தது|: அஸ்வின் பேட்டி

மொகாலி: ‘‘இரு அணிகளுக்கும் வெற்றி மிக அருகில் இருந்தது. இருப்பினும் இப்போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம்’’ என்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் மொகாலியில் நேற்று நடந்த போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத்-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.

முதலில் பேட்டிங் ெசய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்தது. ஓபனர் டேவிட் வார்னர் நிதானமாக விளையாடி ஆட்டமிழக்காமல் 62 பந்துகளில் 70 ரன்கள் (6 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார்.

151 ரன்கள் என்ற இலக்கை துரத்திய பஞ்சாப் அணி, 19. 5 ஓவர்களில் 151 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஓபனர் ராகுல் ஆட்டமிழக்காமல் 53 பந்துகளில் 71 ரன்கள் (7 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தார்.

மயாங்க் அகர்வால் 55 ரன்கள் விளாசி, அணியின் வெற்றிக்கு உதவினார். பரபரப்பான கடைசி ஓவரில் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது.அந்த ஓவரை முகமது நபி வீசினார். ஒரு பந்து மீதமுள்ள நிலையில் 11 ரன்களை எடுத்து, பஞ்சாப் வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் கூறுகையில், ‘‘இரு அணிகளுக்கும் வெற்றி வாய்ப்பு சமமான நிலையில் இருந்தது.

நெருக்கடியான நிலையில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, வெற்றி பெற்றுள்ளோம் என்பதில் மகிழ்ச்சி. ரசிகர்களின் ஆதரவும் எங்களுக்கு உற்சாகமளித்தது.

பேர்ஸ்டோவின் விக்கெட்டை முஜீப் வீழ்த்தியது திருப்புமுனையாக அமைந்தது’’ என்று தெரிவித்தார். ஆட்டநாயகன் விருது பெற்ற ராகுல் கூறுகையில், ‘‘மயாங்க் அகர்வாலும், நானும் இணைந்து நல்ல பார்ட்னர்ஷிப் கொடுத்துள்ளோம்’’ என்று தெரிவித்தார். மயாங்க் அகர்வால் கூறுகையில், ‘‘இந்த வெற்றி எங்களுக்கு எளிதாக கிடைத்து விடவில்லை.

போராடிவெற்றி பெற்றுள்ளோம். முகமது நபி அனுபவம் வாய்ந்த பவுலர்.

அவரது கடைசி ஓவரை எங்கள் பேட்ஸ்மென்கள் பதற்றமின்றி எதிர்கொண்டு, வெற்றி தேடித் தந்துள்ளனர்’’ என்றார்.

.

மூலக்கதை