சார்ல்ஸ்டன் ஓபன் டென்னிஸ்: மகளிர் ஒற்றையரில் மேடிசன் சாம்பியன்

தமிழ் முரசு  தமிழ் முரசு
சார்ல்ஸ்டன் ஓபன் டென்னிஸ்: மகளிர் ஒற்றையரில் மேடிசன் சாம்பியன்

கரோலினா:  சார்ல்ஸ்டன் ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவில் மேடிசன் கீஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தில் உள்ள சார்ல்ஸ்டன் நகரில் நேற்று சார்ல்ஸ்டன் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டி நடந்தது.

இதில் ஒற்றையர் தர வரிசையில் 13ம் இடத்தில் உள்ள டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கியும், தரவரிசையில் 18ம் இடத்தில் உள்ள அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீசும் மோதினர்.  
முதல் செட்டில் இருவரும் விட்டுக் கொடுக்காமல் ஆடினர்.

5-6 என பின்தங்கியிருந்த மேடிசன், போராடி 6-6 என்ற சமநிலையை எட்டினார். இதையடுத்து அந்த செட் டை பிரேக்கர் வரை நீடித்தது.

டை பிரேக்கரில் வோஸ்னியாக்கின் சர்வீஸ்களை அடுத்தடுத்து பிரேக் செய்து, 7-6 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினார்.

இரண்டாவது செட்டில் வோஸ்னியாக்கின் 2 கேம்களை மேடிசன் எளிதாக  பிரேக் செய்தார்.

இதன் மூலம் இப்போட்டியில் 7-6, 6-3 என நேர் செட்களில் வோஸ்னியாக்கியை வீழ்த்தி சார்ல்ஸ்டன் ஓபன் பட்டத்தை முதன் முதலாக மேடிசன் கைப்பற்றினார். தவிர வோஸ்னியாக்கிக்கு எதிராக அவரது முதல் வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.

தனது இந்த வெற்றி குறித்து மேடிசன் கூறுகையில், ‘‘முதல் செட்டில் இருவருமே நன்றாக ஆடினோம். ஆனால் 2வது செட்டில் முக்கியமான இடங்களில் சரியான இடத்தில் வோஸ்னியாக்கின் சர்வீஸ்கள் விழவில்லை.

அதை எனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டேன்’’ என்று தெரிவித்தார். வோஸ்னியாக்கி கூறுகையில், ‘‘கிளே கோர்ட்டில் மேடிசன் அபாரமாக ஆடுகிறார்.

அவரது பவர் ஷாட்டுகள் உண்மையிலேயே அற்புதமாக இருந்தன’’ என்று தெரிவித்தார்.

.

மூலக்கதை