டாப் ஆர்டர் விக்கெட்டுகளை வீழ்த்தியது அதிர்ஷ்டம்: ஸ்ரேயாஸ் கோபால் மகிழ்ச்சி

தமிழ் முரசு  தமிழ் முரசு
டாப் ஆர்டர் விக்கெட்டுகளை வீழ்த்தியது அதிர்ஷ்டம்: ஸ்ரேயாஸ் கோபால் மகிழ்ச்சி

ஜெய்ப்பூர்:  ‘‘டாப் ஆர்டரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியது அதிர்ஷ்டம்தான். இது எனது கிரிக்கெட் வாழ்வின் பெரிய சாதனை’’ என்று ராஜஸ்தான் அணியின் ஸ்பின் பவுலர் ஸ்ரேயாஸ் கோபால் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

. ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் ஜெய்ப்பூரில் நேற்று நடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின.

முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் சேர்த்தது. ராஜஸ்தான் அணியின் ஸ்பின் பவுலர் ஸ்ரேயாஸ் கோபால் அபாரமாக பந்து வீசி விராட் கோஹ்லி, டி வில்லியர்ஸ், ஹெட்மயர் ஆகியோரை சொற்ப ரன்களில் பெவிலியனுக்கு அனுப்பினார்.

பெங்களூரு அணியின் ஓபனர் பார்த்திவ் படேல் மட்டும் தாக்குப் பிடித்து ஆடி 63 ரன்கள் எடுத்தார்.

159 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, 19. 5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்ரேயாஸ் கோபால் கூறுகையில், ‘‘டாப் ஆர்டரில் 3 பெரிய விக்கெட்களை வீழ்த்தியது எனது அதிர்ஷ்டம்.

இது எனது கிரிக்கெட் வாழ்வின் பெரிய சாதனை. இளம்வீரரான எனக்கு இந்த வாய்ப்பு அடிக்கடி கிடைக்காது.

முதல் 6 ஓவர்களில் பெங்களூர் அணிக்கு கடும் நெருக்கடியை அளித்தோம். சுழல் பந்து வீச்சுக்கு சாதகமாக பிட்ச் இருந்தது’’ என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் கேப்டன் ரஹானே கூறுகையில், ‘‘இந்த போட்டியில் 100 சதவீதம் நன்றாக விளையாடினோம்.

திரிபாதியின் பேட்டிங் நம்ப முடியாத வகையில் இருந்தது’’ என்றார். பெங்களூர் அணி கேப்டன் விராட் கோஹ்லி கூறுகையில், ‘‘எங்களது அணி கூடுதலாக 15 ரன்கள் எடுத்திருந்தால் எதிரணிக்கு சவாலாக இருந்திருக்கும்.

ஆனால் கடைசி ஓவர்களில் அதிக ரன்களை எடுக்க முடியவில்லை. கேட்ச் விட்டது உள்ளிட்ட தவறுகளை எங்களது அணி வீரர்கள் செய்துள்ளனர்.

அடுத்து வரும் போட்டிகளில் நம்பிக்கையுடன் விளையாடுவோம்’’ என்று தெரிவித்தார்.

.

மூலக்கதை