மகளிர் ஒற்றையர் தரவரிசை: 2ம் இடத்திற்கு முன்னேறினார் ஹாலேப்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மகளிர் ஒற்றையர் தரவரிசை: 2ம் இடத்திற்கு முன்னேறினார் ஹாலேப்

பாரீஸ்: மியாமி ஓபனில் அரையிறுதிக்கு தகுதி பெற்றதன் மூலம் மகளிர் டென்னிஸ் ஒற்றையர் தரவரிசையில் ரொமேனிய வீராங்கனை சிமோனா ஹாலேப் 2ம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். மேலும் முதலிடத்தில் உள்ள ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகாவை விட ஹாலேப் 239 புள்ளிகளில் மட்டுமே பின்தங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டபிள்யூ டி ஏ மகளிர் ஒற்றையர் தரவரிசை பட்டியல் நேற்று வெளியானது. இதில் 2ம் இடம் வகித்து வந்த செக்.

வீராங்கனை பெட்ரா கிவிடோவா, மியாமி ஓபனில் முத்திரை பதிக்கத் தவறினார். இதனால் அவர் 3ம் இடத்திற்கு இறங்கியுள்ளார்.

3ம் இடத்தில் இருந்த ரொமேனிய வீராங்கனை சிமோனா ஹாலேப், மியாமி ஓபனில் அபாரமாக ஆடி அரையிறுதி வரை முன்னேறினார்.

அரையிறுதியில் அவர் செக்.

வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவாவிடம் தோல்வியடைந்தார். தற்போது ஹாலேப், தரவரிசையில் 2ம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

6,021 புள்ளிகளுடன் தரவரிசையில் முதலிடத்தில் ஜப்பானை சேர்ந்த நவோமி ஒசாகா உள்ளார். 239 புள்ளிகள் குறைவாக 5,782 புள்ளிகளுடன் ஹாலேப் 2ம் இடத்திலும்.

5,645 புள்ளிகளுடன் பெட்ரா கிவிடோவா 3ம் இடத்திலும் உள்ளனர்.

மியாமி ஓபன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லீ பார்டி 2 இடங்கள் முன்னேறி 4,275 புள்ளிகளுடன் 9ம் இடத்தை பிடித்துள்ளார்.

.

மூலக்கதை