சொற்ப ரன்களில் கெய்லை வீழ்த்துவது பெரிய சவால்: ஆல் ரவுண்டர் ரஸல் பேட்டி

தமிழ் முரசு  தமிழ் முரசு
சொற்ப ரன்களில் கெய்லை வீழ்த்துவது பெரிய சவால்: ஆல் ரவுண்டர் ரஸல் பேட்டி

கொல்கத்தா: ‘கிறிஸ் கெய்லை சொற்ப ரன்களில் வீழ்த்துவது பெரிய சவால்’ என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆல் ரவுண்டர் ஆண்ட்ரே ரஸல் தெரிவித்தார். கொல்கத்தாவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.

முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி, 4 விக்கெட் இழப்புக்கு 218 ரன்களை குவித்தது. ராபின் உத்தப்பா 34 பந்துகளில் 63 ரன்களை விளாசினார்.

ஆண்ட்ரே ரஸல் 17 பந்துகளில் 48 ரன்களை குவித்து, அணி இமாலய இலக்கை நிர்ணயிக்க காரணமானார்.   219 ரன்கள் என்ற கடினமான இலக்கை துரத்திய பஞ்சாப் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 190 ரன்களை மட்டுமே எடுத்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் 20 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

டேவிட் மில்லர் அதிகபட்சமாக 59 ரன் விளாசினார். இறுதியில் இப்போட்டியில் கொல்கத்தா அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.    

ஆட்டநாயகனாக தேர்வான ரஸல் கூறுகையில், எனக்கு பரிசாக கிடைத்த கார்களையும், அவார்டுகளையும் பாதுகாப்பாக வைக்க பெரிய ஷெட் தேவைப்படும்.

சிறப்பாக விளையாடிய வீரர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். கிறிஸ் கெயில் எனது சகோதரர் போன்றவர்.

அவரை சொற்ப ரன்களில் வீழ்த்ததுவது பெரிய சவால். திட்டமிட்டபடி, அவருக்கு நெருக்கடி கொடுத்து வெளியேற்றினோம்.

அந்த பணியை நான் செய்ததில் மகிழ்ச்சியடைகிறேன். கே. எல். ராகுலையும் அதே பாணியில் வெளியேற்றினோம்.

இந்த போட்டியில் நான் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளேன். இதில் கெயில் விக்கெட் மிக முக்கியமானது.



மொகமது ஷமியின் பந்தில் நான் ஆட்டமிழந்த போது உள்வட்டத்திற்கு வெளியே நின்ற இளம் வீரருக்கு நன்றி சொல்ல வேண்டும். அவரது பெயர் தெரியவில்லை.

அடிக்கடி இதுபோன்ற வாய்ப்பு கிடைக்காது. கிடைக்கும் வாய்ப்புகளை நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும்’’ என்றார்.

கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறுகையில், ‘‘நிதிஷ் ராணா, உத்தப்பாவின் ஆட்டம் வழக்கம் போல சிறப்பாக இருந்தது.

ஆண்ட்ரே ரஸலின் ஆட்டமும், ஓபனராக சுனில் நரைனை களம் இறக்கியதும் அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தது’’ என்று தெரிவித்தார்.

.

மூலக்கதை