மியாமி ஓபன்: அரையிறுதியில் ஆகர் அலியாசிமி

தமிழ் முரசு  தமிழ் முரசு

மியாமி: கனடாவின் 18 வயதேயான இளம் வீரர்  ஆகர் அலியாசிமி, மியாமி ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். இன்று காலை நடந்த காலிறுதி போட்டியில் ஆடவர் ஒற்றையர் தரவரிசையில் தற்போது 57ம் இடத்தில் உள்ள கனடாவின் இளம் வீரர் ஆகர் அலியாசிமியும், குரோஷியாவின் போர்னா கோரிக்கும் மோதினர்.

கோரிக் தர வரிசையில் 13ம் இடத்தில் உள்ளார். இதில் முதல் செட்டை 7-6 என டை-பிரேக்கரில் போராடி வென்ற ஆகர் அலியாசிமி, 2வது செட்டை மிக எளிதாக 6-2 என கைப்பற்றினார்.

இந்த வெற்றியின் மூலம் ஆகர் லியாசிமி, முதன் முதலாக மியாமி ஓபன் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். நேற்று இரவு நடந்த மகளிர் ஒற்றையர் காலிறுதியில் செக்.

குடியரசின் பிளிஸ்கோவா, சக வீராங்கனை மார்கெட்டாவை 6-3, 6-4 என நேர் செட்களில் வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளார்.

.

மூலக்கதை