தமிழகத்தின் பல மாவட்டங்களில் நாளை முதல் அனல் காற்று வீசும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
தமிழகத்தின் பல மாவட்டங்களில் நாளை முதல் அனல் காற்று வீசும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை: கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பே தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், சென்னை, சேலம், கரூர், திருத்தணி, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல இடங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகியுள்ளது.

கடந்த சில நாட்களாக சென்னையில் 32 டிகிரி செல்சியஸ் முதல் 33 டிகிரி செல்சியஸ் வரை வெயிலின் தாக்கம் அதிகம் இருந்தது. காலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

ஆனால், கோடை மழை பெய்வதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, நேற்று சென்னையில் 34 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருந்தது.

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் நேற்று வெயிலின் தாக்கல் அதிகமாக இருந்தது.

குறைந்தது.

கரூரில் 104 டிகிரி பாரன்ஹிட் (40 டிகிரி செல்சியஸ்), சேலத்தில் 103 டிகிரி பாரன்ஹிட் (39. 6 டிகிரி செல்சியஸ்), வேலூர், திருத்தணியில் 102 டிகிரி பாரன்ஹிட் (39 டிகிரி செல்சியஸ்), மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி, கோவையில் 100 டிகிரி பாரன்ஹிட் (38 டிகிரி செல்சியஸ்) வெப்பம் பதிவாகியிருந்தது. இதனால், பகல் நேரங்களில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாளை முதல் சில தினங்களுக்கும் வெயிலின் தாக்கம் மற்றும் அனல் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.


.

மூலக்கதை