வடசென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்

தினகரன்  தினகரன்
வடசென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்

திருவொற்றியூர்: திருவொற்றியூர் கிழக்கு பகுதி திமுக சார்பில், வடசென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் திருவொற்றியூரில் நேற்று முன்தினம் நடந்தது. பகுதி செயலாளர் தி.மு.தனியரசு தலைமை வகித்தார். கே.பி.பி.சாமி எம்எல்ஏ வரவேற்றார். சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ கலந்துகொண்டு வேட்பாளர் கலாநிதி வீராசாமியை அறிமுகம் செய்துவைத்தார். தொடர்ந்து, திருவொற்றியூர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு வேட்பாளர் கலாநிதி வீராசாமி சென்று, அங்கு மாவட்ட தலைவர் அம்பத்தூர் மகிந்திரன், மத்திய பகுதி தலைவர் நாகராஜ் ஆகியோரை சந்தித்து ஆதரவு திரட்டினார். திமுக கட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்ட தேர்தல் பணிமனையை திறந்து வைத்தார். இதில், சமத்துவ மக்கள் கழகத்தலைவர் எர்ணாவூர் நாராயணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட தலைவர் அன்புசெழியன், கம்யூனிஸ்ட் கட்சி ஜெயராமன், திமுக நிர்வாகிகள் மருது கணேஷ், குறிஞ்சி கணேசன், ஆதிகுருசாமி, நித்யாதாசன், தீர்த்தி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மூலக்கதை