பெண்களுக்கு ராஜஸ்தானில், 'நோ!'

தினமலர்  தினமலர்
பெண்களுக்கு ராஜஸ்தானில், நோ!

ராஜஸ்தானில் சில ஆண்டுகளுக்கு முன், கவர்னர், முதல்வர் மற்றும் சபாநாயகர் என, ஒரே நேரத்தில் பெண்கள் அதிகாரத்தில் இருந்தனர். இது போன்று நாட்டின் எந்த மாநிலத்திலும் இருந்ததில்லை. ஆனால், சில ஆண்டுகளாக, லோக்சபாவில், ராஜஸ்தான் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே இல்லை.
இந்த மாநிலத்தில், பெண் வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்க, வாக்காளர்கள் தயங்கியதே இல்லை. ஆனால், அரசியல் அரங்கில், ஆண்களின் ஆதிக்கம் தான் அதிகம். தேர்தலில் போட்டியிட கூட, பெண் வேட்பாளர்களுக்கு கட்சிகள் இடம் தர முன்வருவதில்லை.முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜேவை, வாக்காளர்கள் மிகவும் விரும்பினர். இதனால், லோக்சபா மற்றும் சட்டசபை அரசியலில் அவர் சிறப்பாக செயல்பட்டார். ஆனால், சட்ட சபை மற்றும் லோக்சபா தேர்தலில், பெண் அரசியல்வாதிகளை ஏற்றுக் கொள்ள, ராஜஸ்தான் மக்கள் மிகவும் தயங்குகின்றனர்.இதற்கு பல உதாரணங்களை கூறலாம்.ராஜஸ்தானில், 1952ம் ஆண்டு நடந்த, முதல் சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட நான்கு பெண்களை, வாக்காளர்கள் நிராகரித்தனர். கடந்த, 1952 முதல், 1967ம் ஆண்டு வரை, 10 பெண்கள் கூட சட்டசபை தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை; இந்த எண்ணிக்கை, காலப் போக்கில் உயர்ந்தது.

மூலக்கதை