பறவை, பன்றி, குரங்கு காய்ச்சலை தொடர்ந்து கர்நாடகத்தில் பரவும் காக்கை காய்ச்சல்: சுகாதாரத்துறை எச்சரிக்கை

தினகரன்  தினகரன்
பறவை, பன்றி, குரங்கு காய்ச்சலை தொடர்ந்து கர்நாடகத்தில் பரவும் காக்கை காய்ச்சல்: சுகாதாரத்துறை எச்சரிக்கை

பெங்களூரு: பறவை காய்ச்சல், பன்றி காய்ச்சல், குரங்கு காய்ச்சலை தொடர்ந்து  தற்போது கர்நாடகாவில் காக்கை காய்ச்சல் பாதிப்பு ஏற்படத்தொடங்கியுள்ளதால்  முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை  விடுத்துள்ளது.கர்நாடகாவில் கடந்த சில காலங்களாக பொதுமக்கள் கோழி  காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் மற்றும் குரங்கு காய்ச்சல் போன்றவற்றால்  அவதிப்பட்டு  வந்தனர். மேற்கண்ட காய்ச்சல் பாதித்தவர்களில் சிகிச்சை பலன்  இன்றி பலர் உயிரிழக்கவும் நேரிட்டது. மேற்கண்ட மர்ம காய்ச்சல்களால்  ஏற்படும்  பாதிப்புகளின் பீதியிலிருந்து மக்கள் விடுபடுவதற்குள், தற்போது  மீண்டும் பீதியை ஏற்படுத்தும் வகையில் புதிய வகை காய்ச்சல் பரவும் நிலை   கர்நாடகாவில் ஏற்பட்டுள்ளது. அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து  மர்ம காய்ச்சலான காக்கை காய்ச்சல் கர்நாடகாவில் பரவத்தொடங்கியுள்ளது. மாநில  மக்கள் பெரும்  அளவில் பாதிக்காத வகையில் காக்கை காய்ச்சலை தடுக்க தேவையான  முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என கர்நாடக  சுகாதாரத்துறை  அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. 1939ம் ஆண்டு உகாண்டா நாட்டை  ே்சர்ந்த மக்களை தாக்கிய வெஸ்ட்நைல் என்ற வைரஸ் மூலம் மக்களிடம் இந்த  காக்கை காய்ச்சல் பரவி  பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. பின்னர், 1999ம்  ஆண்டு வட அமெரிக்காவில் பரவி அங்குள்ள மக்களை வெகுவாக பாதித்தது. இந்த  விசித்திரமான  வைரஸ் காய்ச்சல் தற்ேபாது முதன் முதலில் இந்தியாவில்  பரவியிருக்கும் நிலையில் இந்த கொடிய நோய் பாதிப்புக்கு கேரளாவில் ஒரு  சிறுவன்  பலியாகி உள்ளார்.இந்தியாவில் அதிலும் கேரள மாநிலம்  மணப்புரம் மாவட்டத்தில் 7 வயது சிறுவனை பாதித்திருந்தது. ேகரள  சுகாதாரத்துறை அதிகாரிகள்  இக்காய்ச்சல் குறித்து மத்திய சுகாதாரத்துறை  அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். மணப்புரத்திற்கு வந்த மத்திய  சுகாதாரத்துறை அதிகாரிகள் குழு  சிறுவனை தாக்கியிருப்பது வெஸ்ட்நைல் வைரஸ்  மூலம் ஏற்படும் காக்கை காய்ச்சல் என்பதை உறுதி செய்தனர். தற்போது கேரளாவில்  இருந்து  இக்காய்ச்சல் கர்நாடகாவுக்கு பரவியுள்ளது.  கேரளாவில் உள்ள  மணப்புரம் நகரம் என்பது கர்நாடக எல்லையில் இருந்து 150 கிலோ மீட்டர்  தூரத்தில் உள்ளது. மேலும், இந்த மர்ம காய்ச்சல்  என்பது மணப்புரத்திலிருந்து  காகம் உள்ளிட்ட பறவைகள் மூலம் கர்நாடகாவுக்கு பரவுவதாக அதிகாரிகள்  கூறுகின்றனர். கேரளாவில் இருந்து இந்த  மர்ம காய்ச்சல் என்பது கர்நாடக  எல்லையான பிரம்மகிரி வனப்பகுதிக்கு பரவாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை  நடடிக்கைகளை  மேற்கொள்ளவேண்டும் என அப்பகுதி அதிகாரிகளுக்கு கர்நாடக  சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும்  கர்நாடகாவில் இக்காய்ச்சல் பரவாமல் இருக்க தேவையான  முன்னெச்சரிக்கை  நடவடிக்கை மேற்கொள்ள கர்நாடக சுகாதாரத்துறை  அதிகாரிகள் மற்றும்  கால்நடைத்துறை அதிகாரிகள் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.  இருந்தாலும் கர்நாடகாவில் இக்காய்ச்சல்  இன்னும் பரவவில்லை என சுகாதாரத்துறை  அதிகாரிகள் கூறினாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்ெகாள்ளப்பட்டு  வருவதாக  அதிகாரிகள் கூறுகின்றனர்.சிகிச்சைக்கு வசதி இல்லை: காக்கை  காய்ச்சல் பாதித்தவருக்கு தேவையான சிகிச்சை அளிக்க இன்னும் உரிய மருத்துவ  வசதிகள்  கண்டுபிடிக்கப்படவில்லை. காக்கை காய்ச்சல் பாதித்தவர்களுக்கு  கடுமையான காய்ச்சல், தலைவலி, நரம்புகளில் வீக்கம் காண்பது போன்ற   பாதிப்புகள் ஏற்படும். காக்கை காய்ச்சலுக்கு உரிய சிகிச்சை அளிக்க வசதிகள்  இல்லை என்று கூறினாலும், காய்ச்சல், தலைவலி மற்றும் நரம்பு வீக்கம்   போன்றவற்றுக்கு சிகிச்சை பெற்றுக்ெகாண்டாலே போதும் என்கிறார்கள்  மருத்துவர்கள்.எனவே காய்ச்சல், தலைவலி, நரம்பு வீக்கம் போன்றவை  பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்ததும், மெத்தனப்போக்குடன் இருப்பதை தவிர்த்து  தேவையான  சிகிச்சை பெற்றுக்கொண்டால் மட்டுமே நோய் பாதித்தவர் குணமடைய  முடியும். இல்லையென்றால் உயிரிழக்கவும் நேரிடும் என டாக்டர்கள்  எச்சரிக்கை  விடுகின்றனர்.சிகிச்சை வசதி இல்லை - இணை இயக்குனர்: காக்கை  காய்ச்சல் என்பது இதுவரை கர்நாடகாவில் இன்னும் யாரையும் பாதிக்கவில்லை.  வெஸ்ட்  நைல் வைரஸ்களால் காக்கை உள்ளிட்ட பறவைகள் மூலம் பரவுகிறது. காக்கை  காய்ச்சல் என்பது வெளிமாநிலங்களில் இருந்து வரும் பறவைகள்  மூலம்  கொசுக்களையும், இதை தொடர்ந்து கொசுக்கள் மூலம் மனிதர்களையும் தாக்கும்  சக்தி கொண்டதாகும். இந்தியாவை பொறுத்தவரை  இக்காய்ச்சலுக்கு உரிய மருந்து  மாத்திரைகளோ அல்லது தேவையான சிகிச்சை முறையோ இன்னும் கண்டறியப்படவில்லை. கேரளாவில்  இக்காய்ச்சலுக்கு ஒருவர் இறந்திருப்பது தெரியவந்தது. எனவே, இந்த நோய்  கர்நாடகாவில் பரவாமல் இருக்கும் வகையில்  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்  மேற்ெகாள்ளப்பட்டு வருகிறது. இந்த கொடிய நோயை தடுப்பதை தவிர சிகிச்சை  அளிப்பதற்கான வழிமுறைகள்  குறித்து மத்திய சுகாதாரத்துறையிடம் இருந்து உரிய  அறிக்கை வரும் என எதிர்பார்த்திருக்கிறோம். அறிக்கை வந்ததும் தேவையான   முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தேசிய தொற்று நோய்  தடுப்பு பிரிவு இணை இயக்குனர் சஜ்ஜன் ஷெட்டி கூறினார். மூளை பாதிப்பு அல்லது பக்கவாதம் ஏற்பட்டு இறக்க நேரிடும்: காக்கை  காய்ச்சல் பாதித்தவருக்கு 80 சதவிகிதம் பாதிப்பு ஏற்பட்ட பின்னர் தான்   இக்காய்ச்சல் பாதித்திருப்பதை உறுதி செய்ய முடியும். இக்காய்ச்சல் பாதிப்பு  என்பது ஆரம்ப கட்டத்தில் தெரிவதில்லை. சாதாரண  காய்ச்சலைப்போலவே இருக்கும்.  எனவே, காய்ச்சல் பாதித்தவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேவையான  சிகிச்சையை  பெற்றுக்கொள்ளவேண்டும். காக்கை காய்ச்சல்  பாதித்தவர்களுக்கு இரண்டு அல்லது 3 வாரங்களுக்கு பின்னர் தான் இக்காய்ச்சல்  பாதிப்பு என்பது உறுதி செய்ய முடியும்.  காய்ச்சல், தலைவலி, கை கால்கள்  வலி, நரம்பு வீக்கம் போன்றவை இக்காய்ச்சலின் அறிகுறிகளாகும். அபூர்வமாக ஒரு  சிலருக்கு 2 முதல் 3  தினங்களில் இக்காய்ச்சல் பாதிப்பு என்பது  தெரிந்துவிடும். உரிய நேரத்தில் உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ளவில்லை  என்றால் இறுதிக் கட்டமாக  பக்கவாதம் அல்லது மூளைச்சாவு போன்ற பாதிப்புகள்  ஏற்பட்டு காக்கை நோய் தாக்கியவர் இறக்க நேரிடும்.காய்ச்சலை தடுப்பது எப்படி?காக்கை காய்ச்சல் பாதித்த பகுதிகளில் இருந்து காக்கை உள்ளிட்ட பல்வேறு பறவைகள்  மூலம் மற்ற பகுதிகளுக்கு இந்நோய் பரவுகிறது. பின்னர்,  பறவைகள் மூலம்  கொசுக்களுக்கு பரவுகிறது. கொசுக்கள் மனிதர்களை கடிப்பதால் மனிதர்களை இந்த  கொடிய காக்கை காய்ச்சல் தாக்குகிறது என  மருத்துவ வல்லுனர்கள் கூறுகின்றனர்.  எனவே, வெளியிடங்களில் இருந்து பறவைகள் வரும் இடங்களுக்கு  செல்வதை  தவிர்க்க வேண்டும். அத்துடன் இந்த பகுதிகளில் இருப்பவர்கள்  கொசுக்  கடிக்கடியிலிருந்து தப்பிக்க ேதவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  அத்துடன் வெளியிடங்களில் இருந்து பறவைகள் வருவதை  தடுக்க தேவையான நடவடிக்கை  மேற்கொள்ளவேண்டும். காக்கை காய்ச்சலுக்கு தேவையான சிகிச்சை வசதி  இந்தியாவில் இன்னும்  கண்டுபிடிக்கவில்லை. கொசுக்கள் மூலம் பரவும் காக்கை  காய்ச்சல் பாதிப்பை தடுக்க தேவையான நடவடிக்கையில் பொதுமக்கள் மிகுந்த  எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என மருத்துவ வல்லுனர்கள் பொதுமக்களுக்கு  எச்சரிக்கை விடுகின்றனர். குறிப்பாக காக்கை காய்ச்சல் பாதிப்பு  என்பது கொசுக்கடியிலிருந்து பரவுவதால் கொசுக்கடியிலிருந்து தப்பிப்பதே ஒரே  வழி என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.காக்கை காய்ச்சல் என பெயர் வந்தது எப்படி?வெஸ்ட்நைல்  வைரஸ் என்பது ப்ளேவி வைரஸ் வகையை சேர்ந்த வைரசாகும். இந்த வைரஸ் என்பது  சாதாரணமாக பறவைகளில் காணப்படும்.  இந்த வைரஸ் காக்கை போன்ற பறவைகள் மூலம்  பரவுவதால், வெஸ்ட்நைல் வைரஸ் தாக்குவதால் இதற்கு காக்கை காய்ச்சல் என பெயரிடப்பட்டது.  குறிப்பாக காக்கை போன்ற பறவைகளில் இருந்து  கொசுக்களுக்கும், பின் கொசுக்களில் இருந்து மனிதர்களுக்கும் இக்கொடிய நோய்  பரவுகிறது என்பது  குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை