பாதுகாப்பு விஷயத்தில் கேள்வி எழுப்பி வீரர்களின் தியாகத்தை காங்கிரஸ் புண்படுத்திவிட்டது : அமித்ஷா பேட்டி

தினகரன்  தினகரன்
பாதுகாப்பு விஷயத்தில் கேள்வி எழுப்பி வீரர்களின் தியாகத்தை காங்கிரஸ் புண்படுத்திவிட்டது : அமித்ஷா பேட்டி

புதுடெல்லி: ‘‘புல்வாமா தாக்குதல் குறித்து கேள்வி எழுப்பி வீரர்களின் தியாகத்தை காங்கிரஸ் புண்படுத்திவிட்டது’’ என பா.ஜ தலைவர் அமித்ஷா கூறியுள்ளார். காஷ்மீரின் புல்வாமா தாக்குதல் குறித்து காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டுப் பிரிவு தலைவர் சாம் பிட்ரோடா அளித்த பேட்டியில், ‘‘ஒரு நாட்டைச் சேர்ந்த சிலர் தாக்குதல் நடத்தியதற்காக, அந்நாட்டின் மீது பழி போட முடியாது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில, மும்பை தாக்குதல் நடந்தபோது, இதுபோன்ற விமான தாக்குதலை நடத்தியிருக்கலாம். ஆனால் அது சரியான அணுகுமுறை அல்ல’’ என கருத்து தெரிவித்திருந்தார்.  இந்நிலையில் பா.ஜ தலைவர் அமித்ஷா டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: தேர்தல் நேரத்தில், ஒட்டு வங்கி அரசியலில் காங்கிரஸ் ஈடுபடும். தீவிரவாத தாக்குலில் பலியான வீரர்கள் குடும்பத்தின் சோகத்தின் மீது, இதுபோல் அரசியல் செய்வது நாட்டு நலனுக்கு எதிரானதா இல்லையா என காங்கிரஸ் தலைவர் ராகுல் பதில் அளிக்க வேண்டும். சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்தும், பாலகோட் தாக்குதல் குறிததும் பிட்ரோடா சந்தேகம் எழுப்புகிறார். நாட்டின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பி, வீரர்களின் தியாகத்தை காங்கிரஸ் புண்படுத்துகிறது. இதுதான் காங்கிரஸ் கட்சியின் லட்சணம்.இவ்வாறு அமித்ஷா கூறினார்.

மூலக்கதை