அமெரிக்காவின் கான்சாஸ் மாகாணத்தை மிரட்டும் வெள்ளப் பெருக்கு

தினகரன்  தினகரன்
அமெரிக்காவின் கான்சாஸ் மாகாணத்தை மிரட்டும் வெள்ளப் பெருக்கு

கான்சாஸ்: அமெரிக்காவின் கான்சாஸ் மாகாணத்தை மிரட்டும் வெள்ளப் பெருக்கால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறும் சூழலால் உருவாகியுள்ளது. அந்நாட்டில் திடீரென வீசிய புயலால் மிசெளரி ஆறு அபாய அளவை கடந்து பாய்கிறது. ஆற்றங்கரையில் உள்ள அச்சுசல், வெளன்வோட்  ஆகிய நகரங்களுக்குள் வெள்ளம் புகும் சூழல் உருவாகியுள்ளது. அந்த இரு நகரங்களை அடுத்துள்ள கான்சாஸ் நகரிலும் வெள்ளம் கரையை கடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மூன்று ஊர்களிலும் ஆற்றங்கரையில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். ஆற்றின் வெள்ளப்பெருக்கை விமானம் மூலம் கண்காணிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளது. ஞாயிறு அன்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட வாய்ப்புள்ளதாக கருதும் அதிகாரிகள் அதற்க்கேற்ப பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை