முதல் போட்டியில் அபார வெற்றி பெற்ற சிஎஸ்கே!

PARIS TAMIL  PARIS TAMIL
முதல் போட்டியில் அபார வெற்றி பெற்ற சிஎஸ்கே!

ஐபிஎல் டி20 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிய முதல் போட்டியில் சென்னை அணி பந்துவீச்சில் சுருட்டி வீசி, அபார வெற்றி பெற்றது.
 
நாணய சுழற்சியில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணித் தலைவர் டோனி பந்து வீச்சை தெரிவு செய்தார்.
 
அதன்படி, கோஹ்லியும், பர்திவ் படேலும் துவக்க வீரர்களாக களம் கண்டனர். கோஹ்லி சிங்கிள் எடுக்க, தீபக் சாஹரின் ஓவரில் ஐ.பி.எல் தொடரின் முதல் 4-ஐ அடித்து உற்சாகம் கொடுத்தார் பர்திவ் படேல்.
 
ஹர்பஜன் சிங்கின் 3வது ஓவரின் 3வது பந்தை கோஹ்லி தூக்கி அடிக்க, அது ஜடேஜாவின் கைக்குள் ஐக்கியமானது.
 
6 ஓட்டங்களில் வெளியேறினார் கோஹ்லி. அடுத்ததாக களமிறங்கிய மொயின் அலி, வந்த வேகத்தில் சிக்ஸ் அடித்து மிரட்டினார்.
 
ஆனால் அவரும் ஹர்பஜன் சிங் வீசிய 5வது ஓவரில், அவரிடமே கேட்ச் கொடுத்து 9 ஓட்டங்களில் நடையை கட்டினார்.
 
வீசிய 2 ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் ஹர்பஜன். அடுத்தாக மைதானத்துக்குள் வந்தார் ஏ.பி.டிவில்லியர்ஸ்.
 
அணிக்கு நம்பிக்கை கொடுப்பார் என எதிர்பார்த்த நிலையில் அவரது கேட்சை மிஸ் செய்தார் இம்ரான் தாஹிர்.
 
ஆனால் அடுத்த பந்தே மீண்டும் கேட்ச் போக அதை லாவகமாக பிடித்து ஆர்.சி.பியை மிரட்டினார் ஜடேஜா. தொடர்ந்து ஹெட்மெயரும் ரன் அவுட்டாக, 8 ஓவரின் முடிவில் 38-4 என்ற பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது ஆர்சிபி.
 
அடுத்து களமிறங்கிய ஷிவம் டுபேவும் இதற்கு விதிவிலக்கில்லை. 2 ஓட்டங்களில் இம்ரான் தாஹிரால் வெளியேற்றப்பட்டார்.
 
அடுத்த சில நிமிடங்களிலே கிராண்ஹோமும் வெளியேற 6 விக்கெட்டை இழந்து 50 ஓட்டங்களை மட்டுமே சேர்த்தது ஆர்சிபி.
 
திணறிக்கொண்டிருக்கும் அணியை பர்திவ் படேல் எதிர்புறம் நின்றுகொண்டு நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
 
இருப்பினும் 5 நிமிடத்துக்கு ஒரு வீரர் என்ற இடைவெளியில் பெங்களூர் வீரர்கள் வெளியேறியது, அணியின் ரன்ரேட்டை பெருமளவு குறைத்துள்ளது.
 
இந்த நிலையில் பெங்களூர் அணி 17.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 70 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
 
சென்னை அணி சார்பில் ஹர்பஜன் சிங் 3 விக்கெட்டுகளையும், இம்ரான் தாஹிர் 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா 1 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.
 
71 ஓட்டங்கள் என்ற மிகச் சிறிய இலக்கை நோக்கி சென்னை அணி ஆடியது. ஷேன் வாட்சன் 0, ரெய்னா 19, அம்பதி ராயுடு 28 ஓட்டங்களுக்கு வெளியறினர். இறுதியில் ஜடேஜா, ஜாதவ் அணியின் வெற்றியை உறுதி செய்தனர். 17.4 ஓவர்களில் சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மூலக்கதை