புயலால் பாதிக்கப்பட்ட மொசாம்பிக் நாட்டில் நிவாரண உதவிகள் கிடைக்காமல் மக்கள் அவதி

தினகரன்  தினகரன்
புயலால் பாதிக்கப்பட்ட மொசாம்பிக் நாட்டில் நிவாரண உதவிகள் கிடைக்காமல் மக்கள் அவதி

மொசாம்பிக்: புயலால் பாதிக்கப்பட்ட மொசாம்பிக் நாட்டில் நிவாரண உதவிகள் கிடைக்காமல் மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளன. அந்நாட்டில் கடலை கடந்த இடாய் புயலால் பல ஊர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வீடுகளை இழந்தவர்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்ட போதிலும் அவர்களுக்கு போதிய நிவாரண பொருட்கள் வழங்க முடியாமல் அரசு நிர்வாகம் முடங்கியுள்ளது. சர்வதேச அளவிலான உதவிப்பொருட்களை எதிர்பாத்து காத்திருப்பாகக்கவும் உதவிப் பொருட்கள் வருவதில் தாமதம் நிகழ்வதால் மக்களின் தவிப்பு அதிகரித்துள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றன. இதனிடையே பல முகாம்களில் போதிய சுகாதார வசதிகள் இல்லாததால் காலரா போன்ற தொற்று நோய்கள் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை