10 ஆண்டுகளில் ராகுல் காந்தியின் சொத்து மதிப்பு உயர்ந்தது எப்படி? பா.ஜனதா கேள்வி

PARIS TAMIL  PARIS TAMIL
10 ஆண்டுகளில் ராகுல் காந்தியின் சொத்து மதிப்பு உயர்ந்தது எப்படி? பா.ஜனதா கேள்வி

பா.ஜனதா கட்சி காங்கிரசுக்கு இது தொடர்பாக கேள்விக்கணைகளை தொடுத்து உள்ளது.

இது குறித்து கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய மந்திரியுமான ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘நமக்கு தெரிந்த வரையில், ராகுல் காந்திக்கு ஒரு எம்.பி.க்கான வருமானம் மட்டுமே வரும். ஆனால் 2004–ம் ஆண்டு ரூ.55 லட்சமாக இருந்த அவரது சொத்து மதிப்பு 2009–ல் ரூ.2 கோடியாகவும், 2014–ம் ஆண்டு ரூ.9 கோடியாகவும் அதிகரித்து இருக்கிறது. இது ராகுல் காந்தி மாதிரி, வளர்ச்சியாக தெரிகிறது’ என்று தெரிவித்தார்.

மூலக்கதை