மாணவிகளுக்காக மாராத்தான் ஓடும் பிரியாமணி

தினமலர்  தினமலர்
மாணவிகளுக்காக மாராத்தான் ஓடும் பிரியாமணி

தேசிய விருது பெற்ற நடிகை பிரியாமணி, மாணவிகள் அவர்களது கல்வியைத் தொடர, மே மாதம் 19ம் தேதி பெங்களூருவில் நடைபெற உள்ள 10 கி.மீ. மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு ஓட உள்ளார்.

சேவை நிறுவனம் ஒன்றுடன் இணைந்து பெண்களுக்கான சுகாதாரம், மாதவிலக்கு பற்றிய விழிப்புணர்வு ஆகியவற்றுக்காகத் தொண்டாற்றி வருகிறார் பிரியாமணி. சுகாதாரம், மாதவிலக்கு ஆகிய விஷயங்களால் பல மாணவிகள் படிப்பைப் பாதியில் விடும் சூழல் இன்றும் நிலவி வருவதால், 'பள்ளியில் இருங்கள்' என்ற பிரச்சாரத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.

“பள்ளிகளில் சரியான முறையில் டாய்லெட் இல்லாதது, மாதவிலக்கு சுகாதாரம் பற்றிய சிக்கல் ஆகிய காரணங்களால் பல மாணவிகள் அவர்களது படிப்பை பாதியில் விட்டுவிடுவது அதிகரித்து வருகிறது. பெண்களுக்கு அந்த சமயங்களில் சுகாரமற்ற விஷயங்கள் அவர்களது உடல்நலனைப் பெரிதும் பாதிக்கிறது. பல இடங்களில் அடிப்படை சுகாதார வசதிகள் இல்லாமல் இருக்கிறது. ஒரு பெண்ணாக இந்த விஷயத்தில் பணியாற்றுவது என் கடமை. இந்த மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு ஓடுவது என்னால் ஆன ஒரு சிறு உதவி. இது போன்ற விஷயங்களுக்கு பலர் முன்வந்து ஆதரவு தந்து பல மாணவிகள் படிப்பைத் தொடர உதவ வேண்டும்,” என்கிறார் பிரியா மணி.

மூலக்கதை