இலங்கையுடன் 2வது டி20 தென் ஆப்ரிக்கா வெற்றி

தினகரன்  தினகரன்
இலங்கையுடன் 2வது டி20 தென் ஆப்ரிக்கா வெற்றி

செஞ்சுரியன்: இலங்கை அணியுடன் நடந்த 2வது டி20 போட்டியில் 16 ரன் வித்தியாசத்தில் வென்ற தென் ஆப்ரிக்கா, 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது. சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இலங்கை முதலில் பந்துவீசியது. தென் ஆப்ரிக்கா 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 180 ரன் குவித்தது. ஹெண்ட்ரிக்ஸ் 65 ரன் (46 பந்து, 9 பவுண்டரி), வான் டெர் டஸன் 64 ரன் (44 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் டுமினி 33* ரன் (17 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினர்.அடுத்து களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 164 ரன் எடுத்து 16 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. டிக்வெல்லா 20, திசாரா பெரேரா 22 ரன் எடுத்தனர். 8வது வீரராகக் களமிறங்கிய இசுரு உடனா அதிரடியாக விளையாடி மிரட்டினார். அவர் ஆட்டமிழக்காமல் 84 ரன் விளாசிய நிலையில் (48 பந்து, 8 பவுண்டரி, 6 சிக்சர்), மற்ற வீரர்கள் பெரிய ஸ்கோர் அடிக்கத் தவறினர். தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் மோரிஸ் 3, ஸ்டெயின், ஷம்சி தலா 2, பிரிடோரியஸ் 1 விக்கெட் வீழ்த்தினர். வான் டெர் டஸன் ஆட்ட நாயகன் விருது பெற்றார். தென் ஆப்ரிக்கா 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றிய நிலையில், 3வது மற்றும் கடைசி டி20 ஜோகன்னஸ்பர்கில் இன்று நடக்கிறது.

மூலக்கதை