ஜனவரியில் 8.96 லட்சம் வேலைவாய்ப்பு உருவானது: 17 மாதங்கள் காணாத வகையில் அதிகரிப்பு

தினமலர்  தினமலர்
ஜனவரியில் 8.96 லட்சம் வேலைவாய்ப்பு உருவானது: 17 மாதங்கள் காணாத வகையில் அதிகரிப்பு

புதுடில்லி:இந்தாண்டு ஜனவரியில், அமைப்பு சார்ந்த துறையில், 17 மாதங்களில் இல்லாத வகையில், 8.96 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளதாக, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியம் தெரிவித்துள்ளது


.இந்நிதியம், 2017 செப்., முதல், அமைப்பு சார் தொழிலாளர்களின் ஊதிய விபரங்கள் அடிப்படையில், வேலைவாய்ப்பு புள்ளி விபரத்தை திரட்டி வருகிறது. கடந்த, 2018, ஏப்., முதல், இந்த விபரங்கள் வெளியிடப்படுகின்றன.இது குறித்து, இந்நிதியம் வெளியிட்டு உள்ள அறிக்கை:இந்தாண்டு ஜனவரியில், நிகர அளவில், 8.96 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. இது, 17 மாதங்களில் இல்லாத வளர்ச்சியாகும்.இவ்வளர்ச்சி, கடந்த ஆண்டு ஜனவரியில் உருவான, 3.87 லட்சம் வேலைவாய்ப்புகளுடன் ஒப்பிடும் போது, 13.5 சதவீத உயர்வாகும்.ஜனவரியில், 22 – -25 வயதினர் பிரிவில், 2.44 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன.

அதுபோல, 18 – -21 வயதினர் பிரிவில், 2.24 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.கடந்த, 2017, செப்டம்பரில், நிகர அளவில், 2 லட்சத்து, 75 ஆயிரத்து, 609 வேலைவாய்ப்புகள் உருவாகி இருந்தன. அது முதல், நடப்பாண்டு, ஜனவரி வரை, வருங்கால வைப்பு நிதியத்தில், 76.48 லட்சம் சந்தாதாரர்கள் இணைந்துள்ளனர்.மறுமதிப்பீடுகடந்த, 2018 டிசம்பரில்,7.16 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவானதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது, மறுமதிப்பீட்டில், 1.18 சதவீதம்குறைந்து, 7.03 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.அதுபோல, 2017 செப்., – 2018 செப்., வரை உருவான வேலைவாய்ப்புகள், மறுமதிப்பீட்டில், 6.6 சதவீதம் குறைந்து, 72.32 லட்சத்தில் இருந்து, 67.52 லட்சமாக உள்ளது.


கடந்த ஆண்டு, மார்ச்சில், வருங்கால வைப்பு நிதியத்தில் இருந்து, 29 ஆயிரத்து, 23 சந்தாதாரர்கள் வெளியேறியுள்ளனர். இந்தாண்டு பிப்ரவரியில், 5,498 பேர் இணைந்து உள்ளனர்.இந்த புள்ளி விபரங்களில், ஓராண்டு தொடர்ந்து வருங்கால வைப்பு நிதி சந்தா செலுத்த தவறும், தற்காலிக பணியாளர்களும் இடம் பெற்றிருப்பர்.அனைத்து சந்தாதாரர் விபரங்களும், ‘ஆதார்’ எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளன.தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் சார்பில் கோரப்படும், வருங்கால வைப்பு நிதி அடிப்படையில், வெளியேறும் சந்தாதாரர் விபரங்கள் தயாரிக்கப்படுகின்றன.சந்தா புதிய சந்தாதாரர் புள்ளி விபரம், அவர்களுக்கு அளிக்கும், யு.ஏ.என்., எனப்படும், சர்வதேச கணக்கு எண் அடிப்படையில், முதல் சந்தா செலுத்துவதில் இருந்து கணக்கிடப்படுகிறது.புள்ளி விபரம் தற்காலிகமானது. தொழிலாளர் விபரங்கள் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டு, அடுத்தடுத்த மாதங்களில் மதிப்பீடு செய்யும் பணியில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

6 கோடி பேர்தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியம், அமைப்பு சார்ந்த மற்றும் பகுதி அமைப்பு சார்ந்த, 6 கோடிக்கும் அதிகமானோரின், 10 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட நிதியை பராமரித்து வருகிறது.

மூலக்கதை