2019-ஐபிஎல் டி20: பெங்களூருக்கு எதிரான போட்டியில் சென்னை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

தினகரன்  தினகரன்
2019ஐபிஎல் டி20: பெங்களூருக்கு எதிரான போட்டியில் சென்னை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

சென்னை: சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. முதல் போட்டி  சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய பெங்களூர் அணி 17.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 70 ரன்கள் எடுத்துள்ளது. இதை தொடர்ந்து 71 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17.1  ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது.

மூலக்கதை