இன்று மஞ்சள் மேலங்கி போராட்டம்! - தடைகளும் தண்டனைகளும்!!

PARIS TAMIL  PARIS TAMIL
இன்று மஞ்சள் மேலங்கி போராட்டம்!  தடைகளும் தண்டனைகளும்!!

இன்று சனிக்கிழமை மார்ச் 23 ஆம் திகதி நாட்டின் பல்வேறு பகுதிகளில் மஞ்சள் மேலங்கி போராட்டம் இடம்பெற்ற உள்ளது. அதேவேளை பல பகுதிகளில் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. 
 
கடந்தவார சனிக்கிழமை இடம்பெற்ற தவறு இனி ஒருபோதும் இடம்பெறாது என பிரதமர் எத்துவா பிலிப் அறிவித்துள்ளார். துப்பாக்கிபிரயோகம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்ட இராணுவத்தினர், காவல்துறையினர், ஜோந்தாமினர் என பலர் இன்று பலத்த பாதுகாப்பில் ஈடுபடுவார்கள். அதேவேளை, பரிசில் பல்வேறு பகுதிகளில் போராட்ட்த்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சோம்ப்ஸ்-எலிசே, Place de l'Etoile, எலிசே மாளிகை, நகரசபை மண்டபம், பாராளுமன்றம் என முக்கிய இடங்களில் எல்லாம் தடை ஏற்படுத்தப்பட்டு, போராட்டக்காரர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 
 
தவிர, நீஸ் நரக முதல்வரும் மிக திட்டவட்டமாக <<நீஸ் நகரில் மஞ்சள் மேலங்கி போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது>> என குறிப்பிட்டிருந்தார். Bordeaux மற்றும் Toulouse நகரங்களிலும் போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் கடந்த வாரம் பெருந்த வன்முறைகளை கண்டிருந்த நகரங்களாகும். 
 
அதேவேளை, மஞ்சள் மேலங்கி போராளிகளுக்கான தண்டப்பணம், €35 களில் இருந்து €135 களாக அதிகரிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை