அந்நிய செலாவணி வழக்கில் கிலானிக்கு 14 லட்சம் அபராதம்

தினகரன்  தினகரன்
அந்நிய செலாவணி வழக்கில் கிலானிக்கு 14 லட்சம் அபராதம்

புதுடெல்லி:  அந்நிய செலாவணி வழக்கில், காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்  சையத் அலி ஷா கிலானிக்கு அமலாக்கத்துறை 14.40லட்சம் அபராதம் விதித்துள்ளது.  காஷ்மீர் பிரிவினைவாத தலைவரான சையத் ஷா கிலானியிடம் வெளிநாட்டு கரன்சி அதிகளவில் இருப்பதாக அமலாக்கத்துறையிடம், வருமான வரித்துறை புகாரளித்தது. இது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வந்தது. அப்போது கிலானியிடம் இருந்து 10ஆயிரம் அமெரிக்க டாலர்கள் அதாவது சுமார் 6.8லட்சம் இருப்பது கண்டறியப்பட்டது.  இதனை அடுத்து கிலானி மீது அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணைகள் முடிவடைந்த நிலையில், அவரிடம் இருந்த 6.8 லட்சம் வெளிநாட்டு கரன்சி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அவருக்கு 14.40லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் பிரிவினைவாத தலைவர் யாசீன் மாலிக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மூலக்கதை