ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை 2 நாட்களுக்குப்பின் உயிருடன் மீட்பு

தினகரன்  தினகரன்
ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை 2 நாட்களுக்குப்பின் உயிருடன் மீட்பு

ஹிசார்: அரியானா மாநிலம் ஹிசாரில் நதீம் என்ற ஒன்றரை வயது குழந்தை தனது வீட்டுக்கு வெளியே நேற்று முன்தினம் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அருகில் உள்ள இடத்தில், 60 அடி ஆழத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, பாதுகாப்பாக மூடாமல் வைக்கப்பட்டிருந்தது. அதில் குழந்தை  நதீம் விழுந்தது. தகவல் கிடைத்ததும், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், ராணுவ மீட்பு குழுவினர் மீட்பு உபகரணங்களுடன் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.  ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தை சுவாசிக்க  தேவையான ஆக்ஸிஜன் ட்யூப்கள் மூலம் முதலில் செலுத்தப்பட்டது. இருட்டில் பார்க்கும் கேமிரா உதவியுடன் குழந்தையின் அசைவுகள் கண்காணிக்கப்பட்டன. அதன்பின் குழந்தைக்கு தேவையான பிஸ்கட், ஜூஸ் சப்ளை செய்யப்பட்டது.  ஆழ்துளை கிணற்றிலிருந்து 20 அடி தூரத்தில், குழி தோண்டி, குழந்தையை பாதுகாப்பாக மீட்க சுரங்கம் தோண்டப்பட்டது. 48 மணி நேர தீவிர மீட்பு பணிக்குப்பின் குழந்தை நதீம் பத்திரமாக மீட்கப்பட்டது.

மூலக்கதை