பீகாரில் மெகா கூட்டணி தொகுதி பங்கீடு முடிந்தது

தினகரன்  தினகரன்
பீகாரில் மெகா கூட்டணி தொகுதி பங்கீடு முடிந்தது

பீகாரில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளமும், லாலு பிரசாத் யாதவ்வின் ராஷ்டிரிய ஜனதா தளமும் (ஆர்ஜேடி) சட்டப்பேரவை தேர்தலில் மெகா கூட்டணி அமைத்து பாஜவை தோற்கடித்தது. பின்னர் கூட்டணி முறிந்து ஐக்கிய ஜனதா தளம், பாஜவுடன் இணைந்து ஆட்சியை தொடர்ந்து. கூட்டணியில் இருந்து கழற்றிவிடப்பட்ட ஆர்ஜேடி கட்சி, காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளத்தின் முன்னாள் தலைவர் சரத் யாதவின் எல்ஜேடி உள்ளிட்ட கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி அமைத்துள்ளன. இக்கூட்டணியின் தொகுதி பங்கீடு நேற்று முடிவடைந்தது. 40 தொகுதிகள் உள்ள பீகாரில், ஆர்ஜேடி 19 இடத்திலும், காங்கிரஸ் 9 இடத்திலும் களமிறங்க ராகுலும், தேஜஸ்வி யாதவும் முடிவு செய்தனர். ஆர்எல்எஸ்பிக்கு 5, விஐபிக்கு 3, மஞ்சி கட்சிக்கு 3, சிபிஐ (எம்எல்) முன்னணிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. எந்தெந்த கட்சி, எந்த தொகுதி, வேட்பாளர்கள் யார் என்பது குறித்து அடுத்த சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. இதில், சரத் யாதவ் ஆர்ஜேடி சின்னத்தில் போட்டியிடுவார் என்றும், தேர்தலுக்கு பிறகு அவர் தனது கட்சியை ஆர்ஜேடியுடன் இணைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மூலக்கதை