பப்ஜி விளையாட்டால் கழுத்து நரம்புகள் பாதித்து இன்ஜினியரிங் மாணவர் மரணம்: ஐதராபாத்தில் பரபரப்பு

தினகரன்  தினகரன்
பப்ஜி விளையாட்டால் கழுத்து நரம்புகள் பாதித்து இன்ஜினியரிங் மாணவர் மரணம்: ஐதராபாத்தில் பரபரப்பு

திருமலை: ஐதராபாத்தில் பப்ஜி விளையாட்டால் கழுத்து நரம்புகள் பாதிக்கப்பட்டு இன்ஜினியரிங் மாணவர் உயிரை விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா  மாநிலம், ஜகத்யாலா மாவட்டம், வெலகட்டுரு மண்டலம், ராஜாராம் பல்லியை சேர்ந்தவர் சாகர்(20). இன்ஜினியரிங் மாணவர். இவர் பொழுதுபோக்கிற்காக பப்ஜி விளையாட்டை தனது செல்போனில் விளையாட தொடங்கினார். கால போக்கில் அதற்கு அடிமையாகி தொடர்ந்து 45 நாட்களாக  பப்ஜி விளையாட்டை இரவு பகல் பாராமல் விளையாடிக் கொண்டே வந்தார். இதனால் கழுத்து நரம்புகள் பாதிக்கப்பட்டு மயக்கம் அடைந்தார். இதையடுத்து சாகரை ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஐந்து நாட்களாக சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், சாகரின் கழுத்து நரம்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டதால் நேற்று காலை சிகிச்சை பலனின்றி சாகர் பரிதாபமாக இறந்தார்

மூலக்கதை