கருப்பு பணத்தை வெள்ளையாக்க பணமதிப்பிழப்பு நடவடிக்கை: சீதாராம் யெச்சூரி கருத்து

தினகரன்  தினகரன்
கருப்பு பணத்தை வெள்ளையாக்க பணமதிப்பிழப்பு நடவடிக்கை: சீதாராம் யெச்சூரி கருத்து

புதுடெல்லி: “மோடி அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையானது கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்காக தான் பயன்பட்டது” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொது செயலாளர் சீத்தாரம் யெச்சூரி தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் சீத்தாரம் யெச்சூரி தனது டிவிட்டர் பக்கத்தில், “ஊடக அறிக்கைகளின்படி இந்த ஆண்டு மார்ச் 15ம் தேதி பணப்புழக்கமானது 19.14 சதவீதம் அதிகரித்து ₹21.41 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இதுவே கடந்த 2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்னதாக அதாவது நவம்பர் 4ம் தேதி 17.97லட்சம் கோடியாக இருந்தது. பிரதமர் மோடியின் பணப்மதிப்பிழப்பு நடவடிக்கையானது ரிசர்வ் வங்கியின் அனைத்து ஆலோசனைகளுக்கும் எதிராக எடுக்கப்பட்டது. கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்காகத்தான் இது பயன்பட்டது. மக்களின் வேலை மற்றும் வாழ்க்கை, இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் எப்பாடி நாசமானது என்பது நமக்கு தெரியும்.  ரொக்கமில்லா பொருளாதாரம் என்ற அவர்களின் கூற்று பொய் என்பது தெளிவாகி உள்ளது”  என பதிவிட்டுள்ளார்.

மூலக்கதை