அரசு பங்கு விற்பனை இலக்கை விஞ்சி சாதனை

தினமலர்  தினமலர்
அரசு பங்கு விற்பனை இலக்கை விஞ்சி சாதனை

புதுடில்லி: மத்திய அரசு, நடப்பு, 2018 – -19ம் நிதியாண்டில், பொதுத் துறை நிறுவனங்களில், குறிப்பிட்ட அளவிலான பங்குகளை விற்பனை செய்து, 80 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயித்திருந்தது. தற்போது, இதைவிட, கூடுதலாக, 5,000 கோடி ரூபாய் திரட்டப்பட்டுள்ளது.

இது குறித்து, மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி, ‘டுவிட்டரில்’ கூறியிருப்பதாவது: நடப்பு நிதியாண்டில், பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம், 80 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போதைய நிலவரப்படி, 85 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டப்பட்டுள்ளது.அடுத்த நிதியாண்டிற்கு, பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம், 90 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

நடப்பு நிதியாண்டில், பொதுத் துறை நிறுவனங்களை உள்ளடக்கிய, சி.பி.எஸ்.இ., – இ.டி.எப்., திட்டத்தின் ஐந்தாம் கட்ட வெளியீடு மூலம், 9,500 கோடி ரூபாய் திரட்டப்பட்டது. அத்துடன், ஆர்.இ.சி., மற்றும் ‘பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன்’ இடையிலான பங்கு விற்பனை ஒப்பந்தம் மூலம், 14 ஆயிரத்து, 500 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.

மூலக்கதை