மஞ்சள் மேலங்கி போராட்டம்! - இராணுவத்தினருக்கு துப்பாக்கிச்சூடு நடத்த அனுமதி!!

PARIS TAMIL  PARIS TAMIL
மஞ்சள் மேலங்கி போராட்டம்!  இராணுவத்தினருக்கு துப்பாக்கிச்சூடு நடத்த அனுமதி!!

நாளை சனிக்கிழமை இட்ம்பெறும் மஞ்சள் மேலங்கி போராட்டத்தில், நடமாடும் கண்காணிப்பில் ஈடுபடும் இராணுவத்தினருக்கு, துப்பாக்கிச்சூடு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
பரிசுக்கான இராணுவ ஆளுனர் Bruno Le Ray, தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் இதனை தெரிவித்துள்ளார். கடந்தவார சனிக்கிழமை மஞ்சள் மேலங்கி போராட்டத்தில் அளவு கடந்த வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியிருந்தது. அதைத் தொடர்ந்து பல மாறுதல்களும், சட்டங்களும், கெடுபிடிகளும் மாற்றம் கண்டிருந்தன. இதனைத் தொடர்ந்து, இந்த வாரம், நாளை இடம்பெற உள்ள 19 ஆவது வார மஞ்சள் மேலங்கி போராட்டத்தில் வன்முறைகள் இடம்பெறாமல் தடுக்க இராணுவத்தினரை கண்காணிப்பு பணிக்கு அழைக்கப்பட்டுள்ளது. 
 
இராணுவத்தினம் பரிசில் பல சுற்றுலாத் தலங்களையும், அலுவலகங்களையும், பொது இடங்களையும் பாதுகாக்க உள்ளனர். இந்நிலையில், அவர்களுக்கு தேவைப்படின் துப்பாக்கிச் சூடு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ ஆளுனர் Bruno Le Ray தெரிவித்துள்ளார்.

மூலக்கதை