Yvelines மாவட்டத்தில் - Tour de France இன் இறுதி போட்டிகள்!!

PARIS TAMIL  PARIS TAMIL
Yvelines மாவட்டத்தில்  Tour de France இன் இறுதி போட்டிகள்!!

2019 ஆம் ஆண்டுக்கான Tour de France போட்டிகளின் இறுதி ஓட்டம் Yvelines மாவட்டத்தில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
Tour de France இன் இயக்குனர் Christian Prudhomme இதனை நேற்று முன்தினம் புதன்கிழமை அறிவித்துள்ளார். TDF போட்டிகளின் இறுதிப்போட்டிகளும், விருது விழாவும் மிக பரபரப்பான நிகழ்வுகளாகும்.  இதன் இறுதிப்போட்டிகள் Yvelines மாவட்டத்தில் இடம்பெறுவது தொடரான ஒப்பந்தம் Yvelines மாவட்ட திணைக்கள அதிகாரி Pierre Bédier உடன் ஒப்பந்தம் போடப்பட்டது. 
 
இவ்வருடத்துக்கான TDF போட்டிகள், வரும் ஜூலை மாதம் ஆரம்பிக்கின்றது. அதன் 21 ஆவது கட்ட இறுதிப்போட்டி Rambouillet நகரில் ஆரம்பிக்கின்றது. அதேவேளை, இவ்வரும் மாத்திரம் இல்லாமல், வரும் 2023 ஆம் ஆண்டுவரை TDF இன் இறுதிப்போட்டிகள் Yvelines மாவட்டத்தில் தான் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

மூலக்கதை