ஐபிஎல் தொடரில் 5000 ரன்களை கடக்கும் முதல் வீரர்

தினகரன்  தினகரன்
ஐபிஎல் தொடரில் 5000 ரன்களை கடக்கும் முதல் வீரர்

சுரேஷ் ரெய்னா நாளை நடைபெற உள்ள போட்டியில் 15 ரன்கள், விராத் கோஹ்லி 52 ரன்கள் எடுத்தால் ஐபிஎல் போட்டிகளில் 5,000 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை படைப்பார். ஐபிஎல் போட்டிகளில் இதுவரை அதிகபட்ச ரன் குவித்த வீரர்களில் முதல் இடத்தில் இருக்கிறார்  சுரேஷ் ரெய்னா. சென்னை அணிக்காக விளையாடும் அவர் இதுவரை  176 போட்டிகளில் விளையாடி 4,985 ரன்கள் குவித்துள்ளார். அவர் இன்னும் 15 ரன்களை எடுத்தால் ஐபிஎல் போட்டிகளில் 5000 ரன்கள் குவித்த முதல் வீரர் என்ற பெருமையை பெறுவார். நாளை நடைபெறும் போட்டியில் சுரேஷ் ரெய்னா இந்த சாதனையை படைப்பார் என எதிர்பார்க்கலாம். இவருக்கு அடுத்த இடத்தில் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி  163 போட்டிகளில் 4,948 ரன் குவித்துள்ளார். இவரும் நாளைய போட்டியில் 52ரன்கள் எடுத்தால் 5000 ரன்களை கடக்க வாய்ப்ப உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடும் ரோகித் சர்மா 173 போட்டிகளில் 4,493 ரன்கள் எடுத்து 3வது இடத்திலும, டெல்லி அணியின் கவுதம் கம்பீர் 154 போட்டிகளில் 4,217 ரன்கள் சேர்த்த 4வது இடத்திலும். கொல்கத்தா அணிக்காக விளையாடும் ராபின் உத்தப்பா 165 போட்டிகளில் பங்கேற்று 4,086 ரன் எடுத்து 5வது இடத்திலும் இருக்கின்றனர்.

மூலக்கதை