பிரெக்ஸிற் காலக்கெடு மேலும் நீடிப்பு!

PARIS TAMIL  PARIS TAMIL
பிரெக்ஸிற் காலக்கெடு மேலும் நீடிப்பு!

பிரெக்ஸிற் காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் தெரசா மே அதனை வரவேற்றுள்ளார். இதேவேளை பிரெக்ஸிட் தொடர்பாக தெளிவான தீர்மானங்களை எடுக்க சட்டவல்லுநர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 
பிரதமரின் வேண்டுகோளை ஐரோப்பிய ஒன்றியம் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் அவர் நேற்று (வியாழக்கிழமை) இதனை தெரிவித்துள்ளார்
 
பிரெக்ஸிற் இடம்பெற குறுகிய காலம் ஒன்றே இருந்த நிலையில் பிரெக்ஸிட் உடன்படிக்கை நாடாளுமன்றில் 2 முறை நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் 3 வது வாக்கெடுப்பில் வெற்றி அடைந்தால் பிரெக்ஸிட்டை எதிர்வரும் மே 22 ஆம் திகதி வரையிலும், நிராகரிக்கப்பட்டால் ஏப்ரல் 12 வரையிலும் நீடிக்க ஐரோப்பிய ஒன்றியம் முன்வந்துள்ளது.
 
மார்ச் 29 இல் பிரெக்ஸிற் இடம்பெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் மூன்றாவது வாக்கெடுப்பை நடத்தக் கூடிய காலம் மிகவும் குறைவாக காணப்பட்டது. இதனால் காலக்கெடுவை நீடிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்திடம் தெரசா மே கோரிக்கை விடுத்தார். இதையடுத்தே காலக்கெடு நீடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை