திமுக தேர்தல் அறிக்கையில் மக்கள் நலனே அடிப்படை: பாலகிருஷ்ணன் பேட்டி

தமிழ் முரசு  தமிழ் முரசு
திமுக தேர்தல் அறிக்கையில் மக்கள் நலனே அடிப்படை: பாலகிருஷ்ணன் பேட்டி

சிவகங்கை: மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் சிவகங்கையில் அளித்த பேட்டி: கடந்த தேர்தலின் போது கூறிய தேர்தல் வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்டவர்கள் மோடி ஆட்சியாளர்கள். கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் ரூ. 15 லட்சம் செலுத்துவோம் என அறிவித்தனர்.

தற்போது மோடி அரசும், எடப்பாடி அரசும் தலா ரூ. 2 ஆயிரம் தருகின்றன. மொத்தம் ரூ. 4 ஆயிரம் போக ரூ. 14 லட்சத்து 96 ஆயிரத்தை கேட்கச் சொல்லி வாக்காளர்களிடம் பிரசாரம் செய்து வருகிறோம்.

நீட் தேர்வுக்கு விதிவிலக்கு கோரி, தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியும் கண்டுகொள்ளாதவர்கள் பாஜ ஆட்சியாளர்கள். கஜா புயல் பாதிப்பை பார்வையிட மோடி வரவில்லை.

ரூ. 15 ஆயிரம் கோடி கேட்ட நிலையில் ரூ. 1000 கோடி கூட கொடுக்காதவர்தான் மோடி. படேல் சிலைக்கு ரூ. 3 ஆயிரம் கோடி செலவு செய்கின்றனர்.

தமிழகத்தில் ஓடும் ரயில்களுக்கு தமிழில் பெயர் வைக்காமல் இந்தியில் பெயர் வைக்கின்றனர்.

பெட்ரோல், டீசல் விலை, சிலிண்டர் விலை உயர்ந்து கொண்டே இருப்பதால் சாதாரண மக்களின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படுகிறது. எடப்பாடி ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை.

திமுக தேர்தல் அறிக்கையை எச். ராஜா குறை சொல்கிறார். அவரை போன்ற அரை வேக்காடு அரசியல்வாதிகளுக்கு பதில் சொல்வது கிடையாது.

இருப்பினும் சொல்கிறேன். சிவகங்கை தொகுதியில் எச். ராஜா டெபாசிட் இழப்பார்.

திமுகவின் தேர்தல் அறிக்கை மக்கள் நலனை அடிப்படையாக கொண்டது. விவசாயக் கடன் தள்ளுபடி, அரசு ஊழியர் பணி வரன்முறை, ஒன்றரை கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்பது உள்பட அனைத்தும் தொலைநோக்கு அடிப்படையில் அறிவிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.



ரூ. 15 லட்சம் வங்கிக் கணக்கில் செலுத்துவோம் என அறிவித்தனர். தற்போது மோடி அரசும், எடப்பாடி அரசும் தலா ரூ. 2 ஆயிரம் தருகின்றன.

ரூ. 4 ஆயிரம் போக ரூ. 14 லட்சத்து 96 ஆயிரத்தை கேட்கச் சொல்லி வாக்காளர்களிடம் பிரசாரம் செய்து வருகிறோம்.

.

மூலக்கதை