காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.7 லட்சம் பறிமுதல்: தேர்தல் பறக்கும்படை அதிரடி

தமிழ் முரசு  தமிழ் முரசு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.7 லட்சம் பறிமுதல்: தேர்தல் பறக்கும்படை அதிரடி

காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 3 குழுக்கள் வீதம் ஷிப்ட் முறையில்  பறக்கும் படை அதிகாரிகள்  24 மணி நேரமும் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நேற்று காஞ்சிபுரம் அருகே அய்யம்பேட்டை பகுதியில் பறக்கும்படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்ேபாது, அவ்வழியாக பைக்கில் வந்த சுந்தரமூர்த்தியை மடக்கி சோதனை செய்தனர்.   அவர்,  உரிய ஆவணமின்றி 97 ஆயிரம் ரூபாய் எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுபோல் செங்கல்பட்டு பகுதியில், பறக்கும்படை அதிகாரிகள் பழனிவேல் என்பவரின் காரை சோதனையிட்டபோது, உரிய ஆவணங்களின்றி வைத்திருந்த ₹ 1 லட்சத்து 26 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுபோல், மதுராந்தகத்தில் 2 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய், பெருநகர், மானாம்பதி பகுதியில் 2 லட்சத்து 50 ஆயிரம் ஆகியவற்றை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதற்கான உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.   இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த சூணாம்பேடு நெடுஞ்சாலையில், வில்வராயநல்லூர் பகுதியில் நேற்றிரவு 8 மணியளவில் அலுவலர் சதீஷ்குமார் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.   அப்போது சென்னையில் இருந்து சித்தாமூர் நோக்கி சென்ற ஒரு காரை வழிமறித்து சோதனை ெசய்தனர்.

அதில், சென்னை வேளச்சேரியை சேர்ந்த ஒருவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் ₹2. 20 லட்சம் ரொக்கப் பணத்தை எடுத்து செல்வது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

பின்னர் அப்பணத்தை மதுராந்தகம் வட்டாட்சியர் அலுலகத்தில் ஒப்படைத்தனர்.

சம்பந்தப்பட்ட நபர் உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை பெற்று செல்லலாம் என அதிகாரிகள் கூறி அனுப்பி வைத்தனர்.  

.

மூலக்கதை