உத்திரமேரூர் கும்பேஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாணம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
உத்திரமேரூர் கும்பேஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாணம்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த குண்ணங்குளத்தூர் கிராமத்தில் உள்ள மங்களாம்பிகை உடனுறை கும்பேஸ்வரர் கோயில் 67ம் ஆண்டு பங்குனி உத்திர திருக்கல்யாணம் நேற்று நடந்தது. இதைமுன்னிட்டு நேற்று காலை சாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டது.

பின்னர், சாமிக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். மாலை கோயில் வளாகத்தில் ஆன்மீக சொற்பொழிவு, பரத நாட்டியம், கரகாட்டம், பொய்கால்குதிரை நிகழ்ச்சி நடந்தது.

இதையடுத்து, அலங்கரிக்கப்பட்ட மங்களாம்பிகை உடனுறை கும்பேஸ்வரர் சாமிக்கு மேளதாளம் முழங்க வாணவேடிக்கையுடன் திருக்கல்யாணம் சிறப்பாக நடந்தது.

கல்யாணம் முடிந்தபின் கோயில் வளாகத்தில் சாமிக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இரவு 11 மணியளவில் சாமி ரிஷப வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

வழிநெடுகிலும சாமிக்கு தேங்காய் உடைத்தும் கற்பூரம் காண்பித்தும் வழிபட்டனர். இன்று காலை 6 மணிக்கு சாமி கோயிலை வந்தது.

விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

.

மூலக்கதை