திமுக, கூட்டணி நிர்வாகிகளுடன் திருச்சியில் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

தமிழ் முரசு  தமிழ் முரசு
திமுக, கூட்டணி நிர்வாகிகளுடன் திருச்சியில் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

திருச்சி: திருச்சி சங்கம் ஓட்டலில் இன்று காலை திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளுடன் மு. க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். மாலை முசிறியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தரை ஆதரித்து பேசுகிறார்.


திமுக மற்றும்  கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின்  சொந்த தொகுதியான திருவாரூரில் இருந்து சூறாவளி பிரசாரத்தை திமுக தலைவர்  மு. க. ஸ்டாலின் நேற்று துவக்கினார். காலை சன்னதி தெருவில் உள்ள இல்லத்தில்  இருந்து வீடு வீடாக நடந்து சென்று மக்களிடம் ேநாட்டீஸ் விநியோகித்து வாக்கு  சேகரித்தார்.

பின்னர் மணக்கால்  கிராமத்துக்கு சென்ற ஸ்டாலின், அங்கு மகளிர் சுயஉதவிக்குழுவினரிடம் வாக்கு  சேகரித்தார். இதையடுத்து திருக்காரவாசல் சென்று ஹைட்ரோ கார்பன் எடுக்கும்  திட்டத்துக்கு எதிராக போராடிய விவசாயிகளை சந்தித்து பேசினார்.

பின்னர்  திருவாரூரில் நடந்த ெபாதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு நாகை மக்களவை தொகுதி  இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் செல்வராஜ், திருவாரூர் சட்டமன்ற தொகுதி திமுக  வேட்பாளர் பூண்டி கலைவாணன் ஆகியோரை அறிமுகப்படுத்தி பேசினார். அதேபோல்  மாலை தஞ்சையில் நடந்த பொதுக்கூட்டத்தில் தஞ்சை, மயிலாடுதுறை மக்களவை  தொகுதி திமுக வேட்பாளர்கள், தஞ்சை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளரை  ஆதரித்து பேசினார்.



இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு, இரவு திருச்சி  சங்கம் ஓட்டலுக்கு வந்து மு. க. ஸ்டாலின் தங்கினார். இன்று மாலை 5 மணியளவில்  முசிறியில் தா. பேட்டை சாலையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது.

இதில்  ஸ்டாலின் கலந்து கொண்டு, பெரம்பலூர் தொகுதி ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தரை  ஆதரித்து பேசுகிறார். இதற்காக தனியார் இடத்தில் பிரமாண்டமான மேடை  அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தை முடித்துக்கொண்டு ஸ்டாலின் சேலம்  புறப்பட்டு செல்கிறார்.   முன்னதாக இன்று காலை சங்கம் ஓட்டலில் ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் மற்றும் பெரம்பலூர் தொகுதி திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் பணி குறித்து மு. க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

அதேபோல் திருச்சி மக்களவை தொகுதி கூட்டணி கட்சி நிர்வாகிகளுடனும் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

.

மூலக்கதை